Footer Bottom Menu

ஸ்ட்ரீமிங் வேகம்(Streaming speed); உங்களுக்கு எவ்வளவு வேண்டும் மற்றும் எதற்காக வேண்டும்?

  • 0

  • 2 minutes

Know More

हஆன்லைன் கேம்ஸ் லைவ் ஸ்ட்ரீமிங்-கிற்கு தேவையான இன்டர்நெட் வேகம் என்ன?

FCC-யின் பிராட்பேண்டு வேகக் கையேட்டின்படி, ஆன்லைன் கேமிற்கு குறைந்தபட்ச பதிவிறக்க வேகம் 1 Mbps ஆகும். ஒரு சமயத்தில் நிகழும் ஒரே ஒரு பயன்பாட்டிற்கு மட்டுமே இந்த வேகம் பொருந்தும். ஒரே நேரத்தில் மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட பயனர்கள் ஆன்லைனில் இருக்கும் போது, குறைந்தபட்சமாக 6 Mbps வேகம் தேவைப்படுகிறதென FCC பரிந்துரைக்கிறது. நீங்கள் HD படங்களைப் பார்ப்பதற்கு, வீடியோ கான்ஃபரன்ஸ் மற்றும் ஆன்லைனில் கேம் விளையாடுவதற்கு 15 Mbps அல்லது அதற்கும் மேற்பட்ட வேகம் பரிந்துரைக்கப்படுகிறது. ஒவ்வொரு கேமிங் தளமும் வேறானது, எனவே லைவ் ஸ்ட்ரீமிங் வீடியோ கேம்ஸிற்கு குறைந்தபட்சம் 1 Mbps அப்லோடு வேகம் உங்களுக்குத் தேவைப்படும்.

ஃபேஸ்புக் லைவ்-விற்கு தேவையான குறைந்தபட்ச இன்டர்நெட் வேகம் எவ்வளவு?

ஃபேஸ்புக் லைவ் மற்றும் லைவ் ஸ்ட்ரீமிங் இந்த வருடத்தில் அபரிமிதமான வளர்ச்சியைச் சந்தித்துள்ளது. ஹை டெஃபனிஷன் வீடியோவை ஸ்ட்ரீம் செய்வதற்கு, பயனருக்குக் குறைந்தபட்சம் 5 Mbps தேவைப்படும். ஆயினும், பயனர் குறைந்தது 10 Mbps-ஐ பயன்படுத்துவார். ஃபேஸ்புக்-இல் லைவ் செல்வதற்கு, ஃபேஸ்புக் நிறுவனம் அளித்துள்ள பரிந்துரைகளைப் பார்க்கலாம்-

ஆடியோ பிட் வேகம் 96 Kbps அல்லது 128 Kbps
அதிகபட்ச பிட் விகிதம் 4000 Kbps

1080p (1920 x 1080) ரெசொல்யூஷன்-க்கு அதிகபட்சமாக ஒரு வினாடிக்கு 60 ஃபிரேம்கள்

4K லைவ் ஸ்ட்ரீம் செய்வதற்குத் தேவையானவை என்னென்ன?

4K வீடியோவை ஸ்ட்ரீம் செய்வதற்கு, பயனர்கள் அதிவேக இன்டர்நெட்-ஐ பயன்படுத்த வேண்டும். நெட்ஃபிளிக்ஸ்-ஐ ஸ்ட்ரீம் செய்வதற்கு, பயனர் குறைந்தபட்சம் 25 Mbps-ஐ பயன்படுத்த வேண்டும். 4K HDR வீடியோவை ஸ்ட்ரீம் செய்வதற்கு, குறைந்தபட்சம் 25 Mbps இணைப்புடன் கூடவே, பயனர் HDR மற்றும் HEVC டீகோடர்-ஐ ஆதரிக்கும் 4K UHD TV-ஐ பயன்படுத்த வேண்டியிருக்கும்.

பல்வேறு ஆன்லைன் பயன்பாடுகளை ஸ்ட்ரீம் செய்வதற்குத் தேவையான வேகம் குறித்த இந்த விவரங்கள், நீங்கள் வழங்குநரிடமிருந்து சரியான வேகத்தைப் பெறுகிறீர்களா அல்லது அதை விடச் கூடுதலானது உங்களுக்குத் தேவைப்படுமா என்பதை நீங்கள் தீர்மானிப்பதற்கு உதவும். இவை எல்லாவற்றையும் நீங்கள் கணக்கிட்டுப் பார்த்து, அடிப்படையாகத் தேவைப்படும் அளவுகள் குறித்து அறிந்து கொள்ளலாம். இது உங்களுடைய பட்ஜெட்டிற்கு ஏற்றவாறு சிறந்த இன்டர்நெட் பிளான்-ஐ நீங்கள் தேர்ந்தெடுப்பதற்கு உதவி புரியும்.

Related blogs

13

4 minutes read

How to find Wifi Password of the connected device?

Read more

23

4 minutes read

Benefits of Wi-Fi 6 for Business

Read more

6

4 minutes read

How To Choose the Best Broadband Connection in Hyderabad?

Read more
How may i help you?