ACT ஃபைபர்நெட் பில்-ஐ ஆன்லைனில் கட்டுவதற்கான 4 எளிய வழிமுறைகள்
-
0
-
-
2 minutes
Know More
लஏதேனும் கட்டண பாக்கியைச் செலுத்துவதற்கு, www.actcorp.in என்னும் வலைத்தளத்தில் லாக்-இன் செய்து, வலப்பக்க மெனுவில், பில் பேமெண்ட் என்பதை கிளிக் செய்யவும். அல்லது, நீங்கள் https://selfcare.actcorp.in/payments/external-bills என்ற பக்கத்திற்கு நேரடியாகச் சென்று, உங்களுடைய நகரத்தைத் தேர்ந்தெடுத்து, உங்கள் சப்ஸ்கிரைபர் ஐடி-ஐ உள்ளிட்டுக் கட்டணத்தைச் செலுத்தத் தொடரலாம். இதில் உங்களது கணக்கு விவரங்கள் மற்றும் ஏதேனும் பாக்கித் தொகை நிலுவையில் இருந்தால் காட்டப்படும்.
நீங்கள் எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டுமென்பதைத் தேர்வு செய்ய “பாக்கித் தொகையைச் செலுத்தவும்” அல்லது “மற்ற தொகையைச் செலுத்தவும்” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். கூப்பன் கோட்-ஐ (உங்களிடம் இருந்தால்) உள்ளிட்டுச் சலுகைகளை பெறுவதற்கான வாய்ப்பும் அதில் கொடுக்கப்பட்டிருக்கிறது. “தொடரவும்” என்பதை நீங்கள் கிளிக் செய்தவுடன், பணம் செலுத்தும் தளத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறது, இங்கே கிரெடிட்/டெபிட் கார்டு, நெட் பாங்கிங் அல்லது ஏதேனும் வாலட் மூலம் நீங்கள் கட்டணத்தைச் செலுத்தலாம். மேலும், இதன் மூலம் நீங்கள் கட்டணத்தைச் செலுத்தியது, வெறும் மூன்றே ஸ்டெப்களில் உறுதி செய்யப்படுகிறது.
ஃப்ரீசார்ஜ்/மொபிக்விக்/பேடிஎம்:
எங்களுடைய பார்ட்னர்களான ஃப்ரீசார்ஜ்/மொபிக்விக்/பேடிஎம் மூலமாகவும் நீங்கள் ஆன்லைனில் கட்டணம் செலுத்தலாம். இந்த வலைத்தளங்களில் லாக்-இன் செய்து, உங்களுடைய பயனர் பெயர்/சப்ஸ்கிரைபர் ஐடி/கணக்கு எண் போன்றவற்றை உள்ளீடு செய்து உங்களுடைய பாக்கித்தொகை/ தற்போதைய பில் போன்ற விபரங்களை நீங்கள் பெறலாம். இந்த வலைத்தளங்களில் ஏதேனும் ஒன்றில் உங்களுக்கு ஏற்கனவே கணக்கு இருந்தால், நெட் பாங்கிங், கிரெடிட்/டெபிட் கார்டு அல்லது வாலட் இருப்பின் மூலம், விரைவான மற்றும் பாதுகாப்பான முறையில் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.
பாக்கித்தொகையை செலுத்துவதற்கான லிங்க்-கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
ஃப்ரீசார்ஜ்
மொபிக்விக்
பேடிஎம்
ஒரு வேளை பரிவர்த்தனை தோல்வியடைந்தால் என்ன செய்வது?
பரிவர்த்தனை தோல்வியடைந்து விடும் பட்சத்தில், தயவு செய்து உங்களுடைய வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டிருக்கிறதா என்பதைச் சரிபார்க்கவும். ஒரு வேளை பணம் எடுக்கப்படவில்லையென்றால், நீங்கள் மேற்சொன்ன கட்டண முறைகளில் ஏதேனும் ஒன்றினை பயன்படுத்தி, கட்டணம் செலுத்துவதற்கு மீண்டும் முயலலாம் என்பதைத் தயவு செய்து நினைவில் கொள்ளவும். ஒருவேளை வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டிருந்தால், தயவு செய்து எங்களுடைய வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொள்ளவும் அல்லது எங்கள் மொபைல் ஆப்-பின் மூலமாக உங்கள் பிரச்சனையைப் புகாராகத் தெரிவிக்கவும்(raise a ticket). அப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண, நாங்கள் உங்களுக்கு உதவி செய்வோம்.
ஆன்லைனில் பணம் செலுத்துவது பாதுகாப்பானதா?
நிச்சயமாக! 2016-இன் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, இந்தியாவில் ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவது அதிகரித்துள்ளது. OTP அல்லது PIN பயன்படுத்தி கட்டணம் செலுத்தும் போது, பேமெண்ட் கேட்வே-க்கள் மற்றும் டிஜிட்டல் வாலட்கள் போன்றவை இன்னும் அதிகப்படியான பாதுகாப்பினை அளிக்கிறது. அனைத்து ஆன்லைன் பரிவர்த்தனைகளும் SSL இணைப்பின் மூலமாக மறைக்குறியீடாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. எனவே, உங்களுடைய வங்கி விபரங்கள் எதுவும் மூன்றாம் தரப்பினரிடம் ஒரு போதும் பகிரப்படுவதில்லை.
உங்களுடைய ACT அனுபவம் அல்லது ஆன்லைன்-இல் பில் செலுத்துவது தொடர்பான நாங்கள் இங்கே குறிப்பிடாத பிரச்சனைகள் ஏதேனும் உங்களுக்கு இருப்பின், தயவு செய்து எங்களுடன் பகிர்ந்து கொள்ளவும். உங்களுடைய பிரச்சனைகளைத் தீர்க்க உதவுவதில் மகிழ்ச்சியடைகிறோம்.
உங்கள் வீட்டிலிருந்தபடியே எளிதாக, உங்கள் பில்களை ஆன்லைனில் செலுத்துங்கள் மற்றும் அதிவேக ACT ஃபைபர்நெட் மூலம் தடையின்றி ஒளிபரப்பாகும் உங்களுக்குப் பிடித்த எபிசோட்-களை இடைவிடாது பார்த்து மகிழுங்கள்!
*மூன்றாம் தரப்பினர்களான ஃப்ரீ சார்ஜ்/மொபிகிவிக்/பேடிஎம் மற்றும் பிறர் வழங்கும் கேஷ்பேக்/ப்ரோமோ ஆஃபர்கள்/தள்ளுபடிகள் ஆகியவற்றின் மீதான எந்தவொரு கோரல்களுக்கும் ACT பொறுப்பேற்காது.