உங்கள் வைஃபை எப்படி வேலை செய்கிறது என்று தெரியுமா?
-
0
-
-
3 minutes
வைஃபை என்பது வயர்லெஸ் LAN. இது கணினி நெட்வொர்க்கிங்கின் பயனுள்ள தொழில்நுட்பங்களில் ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இது தகவல் பரிமாற்றம் மற்றும் தகவல்தொடர்பு வழிமுறையையே மாற்றியுள்ளது. வைஃபை என்பதன் அர்த்தம் உண்மையில் எதையும் குறிப்பது அல்ல. ஆனால், இந்த வார்த்தையில் இருந்து, லோக்கல் ஏரியா வயர்லெஸ் தொழில்நுட்பம் எனும் புரிதலைப் பெறுகிறோம்.
வைஃபை என்றால் என்ன? அது எப்படி வேலை செய்கிறது?
மற்ற வயர்லெஸ் சாதனங்கள் வேலை செய்யும் விதத்திலேயே வைஃபை செயல்படுகிறது. சாதனங்களுக்கு இடையில் சிக்னல்களை வழங்க இது ரேடியோ அலைவரிசைகளைப் பயன்படுத்துகிறது. ஆனால் இங்கே ரேடியோ அலைவரிசைகள் என்பவை கார் ரேடியோக்கள், வாக்கி-டாக்கிகள், செல்போன்கள் மற்றும் வானிலை ரேடியோக்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. ரேடியோ அலைகளைப் பயன்படுத்துவதன் மூலம், இது வயர்லெஸ் அதிவேக இணையம் மற்றும் நெட்வொர்க் இணைப்புகளை வழங்குகிறது. வைஃபை என்பது ட்ரேட்மார்க் சொற்றொடர். இதன் உண்மையான பொருள் IEEE 802.11x.
வைஃபை எவ்வாறு வேலை செய்கிறது? முதலில், கணினியின் வயர்லெஸ் அடாப்டர், தகவலை ரேடியோ சிக்னலாக மொழிபெயர்த்து ஆண்டெனாவைப் பயன்படுத்தி எளிதாக அனுப்புகிறது. அதன் பிறகு, வயர்லெஸ் ரௌட்டர் சிக்னலை பெற்று அதை டீகோட் செய்கிறது. வயர்டு ஈத்தர்நெட் இணைப்பைப் பயன்படுத்தி இணையத்திற்குத் தகவலை அனுப்பும் ரௌட்டரும் உள்ளது.
வைஃபை-க்கும் இணையத்திற்கும் என்ன வித்தியாசம்?
வைஃபை என்பது வயர்லெஸ் நெட்வொர்க்குகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு கவர்ச்சிகரமான சொல். முன்னர், சாதனங்களை இணைக்க ஒரே ஒரு வழி மட்டுமே இருந்தது. லோக்கல் ஏரியா நெட்வொர்க்கை உருவாக்க நெட்வொர்க் கேபிள்களைப் பயன்படுத்தும் அந்த வழி சிரமமாக இருந்தது. ஆனால் வைஃபை-யானது கேபிள்கள் இல்லாமல் ஒரு சாதனத்தை மற்றொரு சாதனத்துடன் இணைக்க உதவுகிறது. இதன்மூலம், நேரடி இணைப்பு இல்லாமல், நீங்கள் நெட்வொர்க்கை பெறமுடியும். முக்கியமாக ரௌட்டர் இந்த இணைப்புகளை கட்டுப்படுத்துகிறது. ஒரு சாதனம் மற்றொரு சாதனத்துடன் ரௌட்டர் மூலம் தொடர்பு கொள்கிறது.
இணையம் ஒரு வைட் ஏரியா நெட்வொர்க் அல்லது WAN என அழைக்கப்படுகிறது. இது உலகெங்கிலும் உள்ள கணினிகளை இணைக்கும் ஒரு பரந்த நெட்வொர்க் ஆகும். உங்கள் சொந்த வயர்லெஸ் நெட்வொர்க்கை இதில் இணைத்த பிறகு, நீங்கள் ஒரு பெரிய உலகளாவிய நெட்வொர்க்கின் ஒரு பகுதியாக மாறுவீர்கள். அதுவே இணையம் என்று அழைக்கப்படுகிறது.
வைஃபைக்கு மோடம் தேவையா?
வைஃபை ரௌட்டர், மோடம் இல்லாமலும் வேலை செய்யும். ஐ.பி முகவரிகளுடன் சாதனங்களுக்கு வைஃபை இணைப்பை வழங்க ரௌட்டர் உள்ளது. இதன்மூலம், நீங்கள் எளிதாக, ஒரு கணினியிலிருந்து மற்றொரு கணினிக்கு கோப்புகளை அனுப்பலாம், உங்கள் தொலைபேசியிலிருந்து டிவி அல்லது க்ரோம்காஸ்ட்டுக்கு சேமிக்கப்பட்ட வீடியோவை அனுப்பலாம் மற்றும் கோப்புகளை ப்ரிண்ட் செய்யலாம்.
வைஃபை ரௌட்டருக்கும் மோடத்திற்கும் என்ன வித்தியாசம்?
பல நெட்வொர்க்குகளை இணைக்க மற்றும் அவற்றுக்கிடையே நெட்வொர்க் டிராஃபிக்கை இணைப்பதற்காகவே ரௌட்டர் உள்ளது. இதில், ரௌட்டருக்கு இணையத்துடன் ஒரு இணைப்பு மற்றும் லோக்கல் ஏரியா நெட்வொர்க்குடன் ஒரு இணைப்பு இருக்கவேண்டும். பெரும்பாலான ரௌட்டர்கள் பில்ட்-இன் சுவிட்ச்களுடன் வருகின்றன. அவை பல கம்பிவட சாதனங்களை இணைக்க உதவுகின்றன. பல ரௌட்டர்கள் வயர்லெஸ் ரேடியோக்களைக் கொண்டுள்ளன. அவை வைஃபை சாதனங்களை எளிதாக இணைக்க உதவுகின்றன.
இன்னொருபுறம், ஒரு மோடம் என்பது லோக்கல் நெட்வொர்க்கிற்கும் இணையத்திற்கும் இடையே ஒரு பாலமாகச் செயல்படுகிறது. முன்னர், டிஜிட்டல் தகவலை மாடுலேட் செய்ய, அவற்றை அனுப்ப, மறுமுனையில் டீமாடுலேட் மற்றும் டீகோட் செய்ய, தொலைபேசி இணைப்புகளில் உள்ள சிக்னல்களை மாற்றியமைக்க மோடம்கள் பயன்படுத்தப்பட்டன. நவீன மோடம்கள் அந்த பாணியில் வேலை செய்யாது. இணைப்பு வகையைப் பொறுத்து, உங்கள் நெட்வொர்க்கில் ஒரு மோடம் இணைக்கப்படும். உங்களுக்கு நிலையான ஈதர்நெட் கேபிள் அவுட்புட்டை வழங்குவதற்கு நவீன மோடம்கள் உள்ளன. உங்கள் இணைய சேவை வழங்குநருடன் சரியாக தொடர்புகொள்ள, உங்கள் ISP-இன் உள்கட்டமைப்புடன் பொருந்தக்கூடிய சரியான வகை மோடம் உங்களுக்குத் தேவைப்படும்.
எனக்கு வைஃபை ஏன் தேவை? [நெட்ஃப்ளிக்ஸ் பயன்படுத்துவதற்கு வைஃபை தேவையா?]
உங்கள் வீட்டில் வைஃபை-யை நிறுவ, உங்களுக்கு வயர்லெஸ் ரௌட்டருடன் இணைக்கப்பட்ட மோடம் அல்லது வயர்லெஸ் கேட்வே தேவைப்படும். இணைய சேவை இல்லாமலேயே வைஃபை வசதியைப் பெற முடியும். பிற சாதனங்களுடன் இணைக்க வைஃபை சிக்னல்களை வழங்கும் சாதனங்கள் இணைய இணைப்பு இல்லாமல் இயங்கும்.
நெட்ஃப்ளிக்ஸை பயன்படுத்த வைஃபை அவசியமில்லை. இங்கே, இணைய இணைப்பு கட்டாயம். எந்தவொரு பிராட்பேண்ட் இணைப்பின் உதவியுடனும், நீங்கள் நெட்ஃப்ளிக்ஸில் பிரவுஸ் செய்யலாம் மற்றும் வீடியோக்களைப் பார்க்கலாம்.
நாளுக்கு நாள், வைஃபையின் தேவையானது அதிகரித்து வருகிறது. ஏனெனில், இது செலவு குறைந்தது; வசதியானது மற்றும் எளிதாகப் பெறக்கூடியது. இதன் மூலம், ஒருவர் தங்கள் வழக்கமான பணியிடத்திற்கு வெளியேயும் இணையத்தை அணுக முடியும். உங்களுடன் வைஃபை இருந்தால் இடம்பெயர்தல் உங்கள் உற்பத்தித்திறனை ஒருபோதும் பாதிக்காது.
உங்கள் வைஃபை வேகத்தை அதிகரிப்பதற்கான டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸை இங்கே படிக்கவும்.