Footer Bottom Menu

பிராட்பேண்ட் அடிக்கடி துண்டித்துவிடுகிறதா?

  • 0

  • 3 minutes

உங்கள் பிராட்பேண்ட் சேவை தொடர்ந்து துண்டிக்கப்பட்டால், அதாவது உங்கள் வீட்டு பிராட்பேண்ட் இணைப்பில் ஏதேனும் சிக்கல் இருந்தால், அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இணையம் இணைக்கப்பட்டிருத்தல், துண்டிக்கப்படுதல் அல்லது பின்தங்கியிருத்தல் என அடிக்கடி பிரச்சனை இருந்தால் அது கண்டிப்பாக உங்களுக்கு எரிச்சலைக் கொடுக்கும். ஆம், இணையப் பக்கம் ஒன்றை நீங்கள் திறக்கும் போது, இணைய இணைப்பு காரணமாக உங்களால் அந்த பக்கத்தை அணுக இயலாது. இருப்பினும் இதனை கண்டிப்பாக உங்களால் மாற்ற முடியும். இது குறித்த சிக்கல்கள் என்ன, ஏன் அவ்வாறு நிகழ்கின்றன என்பதை எல்லாம் நீங்கள் புரிந்து கொண்டு, சில எளிய உதவிக்குறிப்புகள் மற்றும் வழிமுறைகளின் உதவியுடன், அவற்றை நீங்களே சரி செய்யலாம். இத்தகைய குறிப்புகள் மற்றும்வழிமுறைகள் பற்றி விளக்கமாக அறிய தொடர்ந்து படிக்கவும்.

உங்கள் இணையம் ஏன் தொடர்ந்து இணைக்கப்பட்டு துண்டிக்கப்படுகிறது?

இணையத்தில் தடங்கல் இருப்பதற்கு, பெரும்பாலும் உங்கள் ரவுட்டர் அல்லது ISP-ன் சிக்கல் காரணமாக இருக்கலாம். இணைய இணைப்பு மற்றும் கணினியில் ஏதேனும் சிக்கல் உள்ளதா என்பதை அறிய, இணைய இணைப்புடன் தொடர்புடைய பல்வேறு சாதனங்களில் இணைப்பு சரியாக உள்ளதா என்று சரிபார்க்கவும். பின்னர், உங்கள் லேப்டாப், மொபைல் மற்றும் போனுடன் இணைக்க முயற்சிக்கவும். உங்கள் நெட்வொர்க்குடன் எந்த சாதனமும் இணையவில்லை என்றால், அது நெட்வொர்க் பிரச்சனை தான் என்பது உறுதியாகும். மேலே உள்ள வழிமுறையைத் தாண்டி, பின்வரும் சில கூடுதல் வழிமுறைகளை மேற்கொள்ளவேண்டும்.

உங்கள் மோடத்தை சரிபார்க்கவும் -

பெரும்பாலான இணைய இணைப்புகள் சிக்னலை ரிலே செய்ய மோடத்தைப் பயன்படுத்துகின்றன. பொதுவாக மோடமில் இணைப்பு சரியாக உள்ளதா மற்றும் அது சரியாக ட்ரான்ஸ்மிட் செய்கிறதா என்பதை சுட்டிக்காட்ட விளக்குகள் இருக்கும். மோடமில் உள்ள சிக்கலை சரிசெய்ய எளிதான வழி அதை ரீசெட் செய்வதாகும். குறைந்தபட்சம் இரண்டு நிமிடங்கள் ஆவது நீங்கள் அதை அணைத்து வைக்கலாம் அல்லது மின் இணைப்பை துண்டித்து வைக்கலாம். நீங்கள் அதை மீண்டும் இணைக்கும்போது, இணைப்பு மீட்டமைக்கப்பட்டு, பயன்பாடு சரியாகும்.

வன்பொருள் சிக்கல்களைக் கவனியுங்கள் -

உங்கள் தகவல்தொடர்பு சிக்கல்களைச் சரிசெய்ய மேலே உள்ள நடவடிக்கைகள் எதுவும் செயல்படவில்லை என்றால், உங்களிடம் குறைபாடுள்ள ரவுட்டர் அல்லது மோடம் இருக்கலாம். பெரும்பாலான ISPகள், எந்தக் கூடுதல் கட்டணமும் இல்லாமல், குறைபாடுள்ள சாதனங்களுக்கு பதிலாக செயலாகும் சாதனங்களை பரிமாற்றிக் கொள்ள அனுமதிக்கும். நீங்கள் சொந்தமாக மோடம் அல்லது ரவுட்டரை வாங்கியிருந்தால், நீங்கள் புதிதாக ஒன்றை வாங்க வேண்டும். புதிதாக வாங்குவதற்கு முன், உங்களின் தற்போதைய சாதனங்களின் உத்தரவாதத்தை மதிப்பாய்வு செய்யவும்.

உங்கள் இணையம் ஏன் தொடர்ந்து துண்டிக்கபடுகிறது என்ற யோசனையா?

இணையம் தொடர்ந்து துண்டிக்கபடுவதற்கு பின்வரும் சில காரணங்கள் இருக்கலாம்-

வை-ஃபை இணைப்புச் சிக்கல்கள்
ரவுட்டர் சிக்கல்கள்
கேபிள் அல்லது ஹார்ட்வேர் தவறுகள்
அதிக வயர்லெஸ் குறுக்கீடுகள்

அடிக்கடி இணைய இணைப்பு துண்டிக்கப்படுவதைத் தவிர்க்க நீங்கள் என்ன செய்யலாம்?

மோடம் சாஃப்ட்வேர் சிக்கல்களை சரிசெய்யவும்

சீரற்ற இணைய இணைப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்று மோடமில் உள்ள சாஃப்ட்வேர் சிக்கல்கள் தான். நீங்கள் மோடம் மற்றும் ரவுட்டரை நீண்ட நேரம் இயக்கினால், சிறிது நேரம் அவற்றை அணைத்து வைத்து, அதன் பின்னர் அவற்றை மீண்டும் இயக்கினால் இணைப்பின் நிலையானத் தன்மையை மீட்டெடுக்கலாம்.

உங்கள் ரவுட்டரை ஃபர்ம்வேரை புதுப்பிக்கவும்

உங்கள் ரவுட்டர் ஃபர்ம்வேர் புதுப்பித்த நிலையில் இருப்பதை உறுதி செய்யவும். ரவுட்டரை சரியான நேரத்தில் புதுப்பிப்பது, இணைப்பு தொடர்பான பெரும்பாலான சிக்கல்களைத் தீர்க்கும். நெட்வொர்க்கின் வரம்பை விரிவுபடுத்த நீங்கள் ஒரு எக்ஸ்டெண்டரை பயன்படுத்தினால், அது எக்ஸ்டெண்டரின் ஃபார்ம்வேருக்கும் பொருந்தும். உங்கள் வீட்டில் உள்ள அனைத்து நெட்வொர்க்கிங் சாதனங்களையும் ஆட்டோ அப்டேட் ஆக அனுமதிக்கவும்.

காலாவதியான அல்லது உடைந்த கேபிள்களை மாற்றவும்

இணைய இணைப்பு துண்டிக்கப்படுவதற்கு வழிவகுக்கும் மற்றொரு சிக்கல் கேபிள் உடன் தொடர்புடையதாக இருக்கலாம். உங்கள் மோடமிலிருந்து ரூட்டருக்கு சில பழைய கேபிள்கள் இணைக்கப்பட்டிருந்தால், அவற்றை மாற்றி, இணைப்பு நிலையானதாக மாறியதா என சரிபார்க்கவும். கேபிளில் உள்ள உள் சேதத்தை வெளிப்புறத்தில் பரிசோதனை செய்து அடையாளம் காண முடியாது.

பிசி (PC) ஹார்ட்வேர் சிக்கல்களைச் சரிபார்க்கவும்

கேபிளை மாற்றிய பிறகும் உங்கள் நெட்வொர்க் பிரச்சனை தொடர்ந்தால், உங்கள் கணினியில் உள்ள நெட்வொர்க் அடாப்டரில் (adapter) சிக்கல் இருக்கலாம். நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து சாதனங்களிலுமா அல்லது ஒரு குறிப்பிட்ட கணினி அல்லது மடிக்கணினியில் மட்டும் இதுபோன்ற சீரற்ற நெட்வொர்க் சிக்கல்களை நீங்கள் எதிர்கொள்கிறீர்களா என்பதைச் சரிபார்த்து, இந்தச் சிக்கலைக் கண்டறியலாம். ஒரு சாதனத்தில் மட்டுமே சிக்கல் காணப்பட்டால், சாதனத்தின் நெட்வொர்க் அடாப்டரை சரிபார்க்க வேண்டும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், நெட்வொர்க் கார்ட்டை சமீபத்திய ஃபர்ம்வேர் கொண்டு புதுப்பிப்பது சிக்கலைத் தீர்க்கும்.

குறைந்த நெரிசலான வயர்லெஸ் நெட்வொர்க்கிற்கு மாறவும்

அதிகப்படியான குறுக்கீடு அல்லது இடையூறு கூட மற்றொரு சிக்கலாக இருக்கலாம். நீங்கள் குறைந்த அலைவரிசையைத் தேர்வுசெய்திருந்தால், ஒரே நேரத்தில் பல சாதனங்கள் நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டிருப்பது, இணைப்பின் வேகம் அவ்வப்போது குறைவதற்கு வழிவகுக்கும். குறிப்பாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சாதனங்கள், தகவல்களை ஸ்ட்ரீமிங் செய்யும் போது இது நிகழ்கிறது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், உங்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற வேறு திட்டத்தைத் தேர்வு செய்ய முயற்சிக்கவும். மேலும், குறுக்கிடக்கூடிய வயர்லெஸ் சாதனங்களை நீங்கள் அணைத்தவுடன் இணைப்பின் நிலையானத் தன்மையை சரிபார்க்கவும்.

ரவுட்டரின் வரம்பை நீட்டிக்கவும்

உங்கள் ரவுட்டரின் கவரேஜ் பகுதியின் விளிம்பிற்கு அருகில் இருப்பதால் இணைப்பின் வேகம் குறைகிறதா எனச் சரிபார்க்கவும். மிகவும் திறமையான ரவுட்டர்ளுடன் கூட, நீங்கள் அதிகபட்ச வரம்பிற்கு அருகில் செல்லும்போது இணைப்புச் சிக்கல்கள் இருப்பதை நீங்கள் கவனிக்கலாம்.

நீங்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் போது இணையத்தின் வேகம் குறைந்து கொண்டே இருக்கும். மேற்கூறிய வழிகளால், நீங்கள் இந்த சிக்கல்களில் இருந்து விடுபடலாம். ஆனால் சிக்கல் தொடர்ந்தால், மந்தமான இணைய இணைப்புடன் போராட வேண்டாம். உங்கள் இணைய சேவை வழங்குநரின் தொழில்நுட்ப ஆதரவுக் குழுவைத் தொடர்புகொண்டு, உங்கள் பிராட்பேண்ட் இணைப்பின் சிறப்பான சேவையை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Related blogs

13

4 minutes read

How to find Wifi Password of the connected device?

Read more

23

4 minutes read

Benefits of Wi-Fi 6 for Business

Read more

6

4 minutes read

How To Choose the Best Broadband Connection in Hyderabad?

Read more
How may i help you?