சிறந்த இன்டர்நெட் சேவை வழங்குநரை தேர்ந்தெடுப்பதற்கான முழு வழிகாட்டி
-
0
-
-
3 minutes
இணையம் என்பது பணக்காரர்களுக்கு மட்டுமே உரியது என்ற நாட்கள் மாறி நீண்ட காலமாகிவிட்டன. இன்றைய காலகட்டத்தில் மற்ற பயன்பாடுகளைப் போலவே இதுவும் அன்றாட தேவைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. இது பயனர்களுக்கு, நடக்காததையும் நடத்திக்காட்டும் சாத்தியம் நிறைந்த உலகத்தின் கதுவுகளை திறப்பது மட்டுமின்றி அவர்கள் இருக்கும் இடத்திலிருந்தே அவர்களுக்கு தேவையான அனைத்தையும் அணுக அனுமதிக்கிறது.
இருப்பினும், நல்ல இணைய இணைப்பை பெற, ஒருவர் எந்த தங்குதடையுமில்லாத அதிக-வேகம் தரும் நெட்ஒர்க்கை வழங்கும் சிறந்த இணைய சேவை வழங்குநரை கண்டறியவேண்டும். இப்போது, இங்கு எழும் கேள்வி: எனது அருகிலிருக்கும் சிறந்த இணைய சேவை வழங்குநரை தேர்வு செய்வதற்கான அளவுருவாக இருப்பது வேகம் மட்டும்தானா? வேறேதேனும் காரணிகளும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறதா?
உங்கள் எல்லா கேள்விகளையும் சந்தேகங்களையும் தீர்க்க, முக்கிய அளவுருக்கள் என்னென்ன என்பதை கண்டறிய இந்த பக்கத்தின் கீழ் வரை ஸ்க்ரோல் செய்து பார்க்கவும்,
ISP யை தேர்வு செய்வதற்கான முக்கிய காரணி வேகம் மட்டுமா?
இணையமும், வேகமும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தது அல்ல என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ISP யை தேர்வு செய்யும் போது கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய காரணிகளில் வேகமும் ஒன்று, ஏனெனில் உங்கள் பணி எந்த தடங்கள், தாமதம் இல்லாமல் தொடர்ந்து நடக்க போதிய இணைய வேகம் அவசியம்.
இணைய சேவை வழங்குநர்கள் பயனர்களை கவர்ந்திழுக்க பெரும்பாலும் பயன்படுத்தும் முக்கிய காரணி வேகம், ஆனால் அத்தகைய வேகம் விளம்பரப்படுத்தப்பட்டதால் மட்டும் நீங்கள் அதை பெறுவீர்கள் என்று அர்த்தமல்ல, அது முற்றிலும் உங்கள் இருப்பிடம் மற்றும் அதை கடத்தும் ஊடகத்தை பொருத்தது என்ற உண்மையை நினைவில் கொள்ளுங்கள். சில வாடிக்கையாளர்கள் 1000 Mbps யிலேயே ஃபைபர் இணைப்பை பெரும் அளவு அதிர்ஷடம் பெற்றவர்களாக இருக்கிறார்கள், கிராமப்புறங்களில் இருக்கும் சில வாடிக்கையாளர்களுக்கு DSL இணைப்பில் 3 லிருந்து 6Mbps வரைக்கூட கிடைப்பதில்லை.
சிறந்த இணைய சேவை வழங்குநரை முக்கிய அளவுருக்கள்
வேகம் என்பது மிக முக்கியமான காரணியாக இருந்தாலும், அதுமட்டுமே ஒரு காரணம் அல்ல. நீங்கள் தேர்வு செய்யும் போது பல விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம் வாருங்கள்.
கிடைக்கும்தன்மை
இணைய இணைப்பு இரண்டு வகைப்படும் - அதீத வேகம் மற்றும் அதிகம் கிடைக்கும்தன்மை. அதீத வேகத்திற்கான நெட்ஒர்க் இணைப்பு அபாரமான இணைப்புத்திறனை வெளிப்படுத்தினாலும், கிடைக்குத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை எப்போதும் பிரச்சனையாக இருக்கிறது.
அட்டகாசமான வேகத்தை வழங்கும் இணைய இணைப்பு வழங்குநரை தேர்வு செய்தாலும் அது உங்கள் பகுதியில் இல்லையென்றாலும் பிரயோஜனமில்லை. கிராமப்புறங்கள் மற்றும் சிறு நகரங்கள் என்று வரும் போது, ISPக்களின் எண்ணிக்கை வரம்புக்குட்பட்டது.
எனவே, கூகுளில் “எனது பகுதியில் ISP சிறந்தது” என்று மக்கள் தேடும் போது கிடைக்கும் ISPக்களை பார்க்கவும்.
இவ்வாறு அதிகம் கிடைக்கும்தன்மை கொண்ட சேவை வழங்குநர்கள் வழக்கமாக 99.99% விட அதிகமான நேரம் மற்றும் தோராயமாக ஒரு வருடத்துக்கு 2 மணிநேரம் குறைவாக இருந்தாலோ அவர்கள் சேவை நிலை ஒப்பந்தத்தை வழங்கவேண்டும்.
எனவே, உங்கள் வணிகம் முழுவதும் இணையத்தை சார்ந்ததாகவும் ஆஃப்லைனில் வேலை செய்வதற்கான வாய்ப்பு இல்லை என்றாலும், நெட்வொர்க் சேவை வழங்குநரின் கிடைக்கும்தன்மை மற்ற அனைத்து காரணிகளையும் விட முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
உங்கள் வணிகத்தின் தலையெழுத்தை நிரணயிப்பது இணையம் தான் என்ற நிலையில் நீங்கள் இருக்கும் பட்சத்தில், அதிகம் கிடைக்கும்தன்மை கொண்ட இணைய இணைப்பை வாங்குவதே உங்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும்.
இணைப்பின் வகை
அருகாமையில் இருக்கும் சிறந்த இணைய இணைப்பு வழங்குநரை தேர்வு செய்வதற்கான இரண்டாவது முக்கியமான விஷயம் இணைப்பின் வகை - அது ஒயர்ட் அல்லது ஒயர் அல்லாதவை. இது உங்கள் இணையம் எவ்வளவு வேகமானது என்பதை நீங்கள் உணர்வதை தீர்மானிக்கும் அளவுரு.
செயற்கைக்கோள் அல்லது ஒயர் அல்லாத இணைய இணைப்புகள் குறைவான வேகத்தை வழங்குவதற்கு பெயர்போனவை, அதன் பின்னணி காரணம் நமது இயற்பியல். இருப்பினும், ஒயர்ட் இணைப்புகள் அதாவது ஃபைபர் இணைப்புகள் மேற்கூறியவைகளை விட சிறந்த வேகம் மற்றும் இணைப்புத்தன்மையை வழகுங்கிறது.
எனவே, உங்கள் வீடு அல்லது வணிக முகவரி அருகில் கிடைக்குத்தன்மையுடைய சேவை வழங்குநரை தேர்வு செய்யுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.
நம்பத்தன்மை வாய்ந்த வாடிக்கையாளர் சேவை மையம்
நெட்ஒர்க் சேவை வழங்குநரை தேர்வு செய்வதற்கான முக்கிய அளவுருக்களை பற்றி பேசிக்கொண்டிருக்கையில், நம்மால் நம்பத்தன்மை வாய்ந்த வாடிக்கையாளர் சேவை மையத்தின் முக்கியத்துவதை பற்றி அறிவதை மறக்கமுடியுமா, அதிலும் குறிப்பாக வணிகம் நடத்தும் வாடிக்கையாளர்கள். நம்பகத்தன்மை இல்லாத இணைய இணைப்பு என்பது நம்மை மனஅழுத்ததிற்கு தள்ளுவது மட்டுமின்றி எதிர்விளைவுகளையும் கொடுக்கும்.
ஒருவேளை நீங்கள் உங்கள் இணைய இடர்பாடுகளில் எந்தவிதமான ஆபத்துக்குள்ளாக்க முடியாத வணிகத்தில் இருந்தால், நீங்கள் எப்போதும் SLAவை வழங்கும் அருகிலிருக்கும் ISP தேர்வு செய்யுங்கள்(சேவை நிலை ஒப்பந்தம்). உங்கள் சேவை வழங்குநர் எவ்வளவு நம்பகத்தன்மை வாய்ந்தவர் என்பதை இந்த ஒப்பந்தம் முக்கியமாக குறிப்பிடுகிறது.
இணைய இணைப்பு எவ்வளவு சிறந்ததாக இருந்தாலும் சரி, ஏதாவது ஒருநாள் அதில் பிரச்சனை ஏற்படலாம், அது ஒயரில் ஏற்பட்ட விரிசல் அல்லது ஹார்டுவேர் பிரச்சனை என எதுவாக இருந்தாலும் சரி. இங்கு வாடிக்கையாளர் சேவை மையமே அந்த பிரச்சனையை சரிசெய்யும்.
அபாரமான, நம்பகமான இணைய இணைப்பு சேவை வழங்குநரால் எவ்வளவு விரைவாக உங்கள் பிரச்சனைக்கு தீர்வு வழங்க முடியும் என்பது தெரியும்.
விலை
அட்டகாசமான கிடைக்கும்தன்மை மற்றும் நம்பகமான வாடிக்கையாளர் சேவையுடன் சிறந்த இணைய இணைப்பைப் பெறுவதற்கான விலை கருத்தில் கொள்ள வேண்டிய மிகப்பெரிய காரணியாகும்.
நீங்கள் பிராட்பேண்ட் திட்டங்களை தேர்வு செய்கையில், உங்களுக்கு எப்போதும் சில கேள்விகள் எழலாம், அதாவது நீங்கள் எவ்வளவு இணைய சந்தாவிற்காக செலுத்தவேண்டும்? அது அதற்கு போதியதா அல்லது இல்லையா? நீங்கள் இறுதியான முடிவை எடுப்பதற்கு முன்பு இத்தகைய கேள்விகளுக்கு பதில்கள் தெரிந்திருப்பது அவசியம்.
சிறந்த ISP என்று வரும்போது, விலை மற்றும் வேகம் ஆகிய இரண்டிற்கும் இடையில் சரியான பேலன்ஸ் இருப்பது அவசியம். உங்கள் பட்ஜெட்டை முடிவு செய்யுங்கள், நீங்கள் விருப்பத்தை தேர்வு செய்கையில் அதிலிருந்து மாறாதீர்கள். எப்பொழுதுமே விருப்பம் பல எனவே இதற்கு அதிகம் செலவழிக்க தேவையில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்
இணைய சேவை வழங்குநரை தேர்வு செய்வது என்பது அவசியம், எனவே அதனால், ஒருவர் சிறந்த தேர்வை தீர்மானிக்க ஒவ்வொரு காரணியையும்(வேகத்துடன்) கருத்தில்கொள்ளவும். கூகுளில் எனது அருகிலிருக்கும் சிறந்த இணைய இணைப்பு வழங்குநர்” என்ற தேடலில் சமீபத்தில் களமிறங்கியவர்களில் நீங்களும் ஒருவரா? வேறேதும் தேடி நேரத்தை வீணடிக்காமல் ACT பைபர்நெட் ஐ உடனடியாக தொடர்புக்கொண்டு அதி விரைவான நெட்ஒர்க்கை பெற்றிடுங்கள்.