பிராட்பேண்ட் என்றால் என்ன?
-
0
-
-
7 minutes
தற்போது வீடு, பணியிடம் என எங்கு பார்த்தாலும், கிட்டத்தட்ட அனைவரிடமும் இணைய இணைப்பு உள்ளது என்றும் சொல்லலாம். மக்கள் இணையத்தில் பிரவுஸ் செய்யவும் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கவும், அவர்களின் மின்னஞ்சல்களைச் சரிபார்க்கவும், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு செய்தி அனுப்பவும் மற்றும் பல செயல்பாடுகளைச் செய்யவும் இணையத்தை தான் பயன்படுத்துகின்றனர். மனித உயிர்கள் இணையத்தை முழுவதுமாகச் சார்ந்துவிட்டன என்று சொன்னால் அது மிகையாகாது. ஐந்து நிமிடங்களுக்கு இணைய சேவை முடக்கப்பட்டாலும், மக்கள் அமைதியின்மை மற்றும் விரக்தியை உணர ஆரம்பிக்கிறார்கள். சேவை எப்போது மீட்டமைக்கப்படும் என்று கேட்க, அவர்கள் விரைவில் தங்கள் இணைய வழங்குநரைத் தொடர்பு கொள்கிறார்கள்.
ஆனால், எது நம் வாழ்வில் இணையத்தை மிகவும் அணுகக்கூடியதாகவும் நம்பக்கூடியதாகவும் ஆக்குகிறது என்பது பற்றி நாம் சிந்திக்கவே இல்லை. அதற்கான பதில் பிராட்பேண்ட் இணைப்பு. ஆனால், பிராட்பேண்ட் இணைப்பு என்றால் என்ன? அதன் வெவ்வேறு வகைகள் என்ன, நமக்கு அவை ஏன் தேவை? சிறந்த பிராட்பேண்ட் பேக்கேஜை எவ்வாறு தேர்வு செய்வது?
இந்தக் கேள்விகள் அனைத்திற்குமான பதில்களை நாம் இந்தப் பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
பிராட்பேண்ட் இணையம் என்றால் என்ன?
அதிவேக இணையம் என்றும் அழைக்கப்படும் பிராட்பேண்ட், டயல்-அப் இணைப்புகளை விட மிக அதிகமான வேகத்தை வழங்கக்கூடிய ஆல்வேஸ்-ஆன் இணைய இணைப்பு ஆகும். இது பயனர்களை இணையத்தில் பிரவுஸ் செய்யவும், வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்யவும், பெரிய ஃபைல்களை பதிவிறக்கவும், பாரம்பரிய டயல்-அப் இணைப்பை விட வேகமாக குரல் அல்லது வீடியோ அழைப்புகளைச் செய்யவும் அனுமதிக்கும், ஒரு வகையான இணைய அணுகலாகும். பிராட்பேண்ட் இணைப்புகள் பொதுவாக கேபிள், ஃபைபர் ஆப்டிக் அல்லது டிஎஸ்எல்/DSL (டிஜிட்டல் சப்ஸ்கிரைபர் லைன்) வழங்குநர்களால் வழங்கப்படுகின்றன. பிராட்பேண்ட் இணைப்புகள் வணிக மற்றும் குடும்பத் தேவைகளுக்கும் விருப்பமான தேர்வாகும், ஏனெனில், அவை பல நன்மைகளை வழங்குகின்றன. டயல்-அப் இணைப்புகளுடன் ஒப்பிடும்போது, பிராட்பேண்ட் அதிக வேகம் மற்றும் நம்பகமான சேவையை வழங்குகிறது, அமைப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் மிகவும் எளிதானது, மேலும் பெரிய ஃபைல்களை குறைந்த நேரத்தில் பதிவிறக்குகிறது. மேலும், பிராட்பேண்ட் இணைப்புகள் டயல்-அப் ஐ விட மிகவும் பாதுகாப்பானவை மற்றும் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட சாதனங்களையும் அணுக பயன்படுத்தப்படலாம்.
வயர்டு பிராட்பேண்ட் இணைப்புகளின் வகைகள் என்ன?
பிராட்பேண்ட் இணைப்புகள் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தைப் பொறுத்து பல்வேறு வகைகளில் வயர்டு இணைய இணைப்புகளாகக் கிடைக்கின்றன. இணைய சேவை வழங்குநர்கள் வழங்கும் மிகவும் பிரபலமான வயர்டு வகைகள் பின்வருமாறு:
கேபிள் பிராட்பேண்ட்
கேபிள் பிராட்பேண்ட் 100 Mbps வரையிலான அதிவேகத்தை வழங்குகிறது, இது மீடியாவை ஸ்ட்ரீமிங் செய்வதற்கும், பெரிய ஃபைல்களைப் பதிவிறக்குவதற்கும் சிறந்தது. இது இணைய அணுகலை வழங்குவதற்கு கேபிள் நெட்வொர்க்கைப் பயன்படுத்துகிறது, எனவே, இந்த வகை பிராட்பேண்டைப் பயன்படுத்துவதற்கு கேபிள் இணைப்பு தேவை.
ஃபைபர் இன்டர்நெட் பிராட்பேண்ட்
ஃபைபர் இன்டர்நெட் பிராட்பேண்ட் என்பது வேகமான இணைப்பாகும், இது 1 Gbps வரையிலான வேகத்தை வழங்குகிறது. இது இணையத்தை வழங்க ஆப்டிகல் ஃபைபர்கள் மற்றும் காப்பர் வயர்களின் கலவையைப் பயன்படுத்துகிறது, மற்ற வகை பிராட்பேண்ட்களை விட ஃபைபர் இணையத்தை மிகவும் நம்பகமானதாகவும் வேகமாகவும் ஆக்குகிறது. ஃபைபர் இணையம் என்பது இணைய அணுகலின் எதிர்காலம். மற்ற வகை வயர்டு மற்றும் வயர்லெஸ் இணைய இணைப்புகளுடன் ஒப்பிடுகையில் இது அதிக நம்பகமான மற்றும் அதிக வேகத்தை வழங்கும். எனவே, புதிய இணைய இணைப்பைத் தேடும் பயனர்கள் ஃபைபர் இணைய இணைப்பைத் தேர்வு செய்ய வேண்டும்.
DSL பிராட்பேண்ட்
DSL பிராட்பேண்ட் என்பது மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் பிராட்பேண்ட் சேவையாகும், இது 100 Mbps வரை வேகத்தை வழங்குகிறது. ஃபோன் லைனில் இணைய அணுகலை வழங்க டிஜிட்டல் சப்ஸ்கிரைபர் லைன் தொழில்நுட்பம் அல்லது DSL-ஐப் பயன்படுத்துகிறது. இந்த வகை பிராட்பேண்ட் இணைப்பு கேபிளை விட நம்பகமானது ஆனால் அதன் அளவு வேகமானது இல்லை. வயர்டு இணைப்புகளுடன், வயர்லெஸ் பிராட்பேண்ட் சேவைகளும் உள்ளன. வயர்லெஸ் இணைப்புகள் இணைய அணுகலை வழங்க ரேடியோ சிக்னல்களைப் பயன்படுத்துகின்றன, அவை டேப்லெட்டுகள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் போன்ற மொபைல் சாதனங்களுக்கு ஏற்றதாக அமைகின்றன. அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.
பவர்லைன்கள் மூலமாக பிராட்பேண்ட்
பவர்லைன்ஸ் மூலமான பிராட்பேண்ட் (பிஓபி/BOP) என்பது ஒரு வகையான பிராட்பேண்ட் இணைப்பு ஆகும், இது இணைய அணுகலை வழங்க மின் இணைப்புகளைப் பயன்படுத்துகிறது. இது ஃபைபர் மற்றும் கேபிள் இணைப்புகளை விட ஒப்பீட்டளவில் மலிவானது. இது இணைய பிராட்பேண்ட் டொமைனில் ஒரு புதிய தொழில்நுட்பமாயினும், வேகம் மற்றும் நம்பகத்தன்மையின் அடிப்படையில் கணிசமான நன்மைகளை அளிக்கிறது. இருப்பினும், பிபிஎல்-களின் (BPL) சிறந்த வசதி, இணைய அணுகலுக்கான உள்கட்டமைப்பை அமைப்பதற்கான செலவைக் குறைப்பதாகும். ஏனென்றால், இவை மின்சாரம் வழங்கப் பயன்படுத்தப்படும் ஏற்கனவே நிறுவப்பட்ட மின் கம்பிகளைப் பயன்படுத்துகின்றன.
வயர்லெஸ் இணைய பிராட்பேண்ட் இணைப்புகளின் வகைகள் என்ன?
வயர்லெஸ் இணையம் என்பது இணைய அணுகலை வழங்க வயர்லெஸ் நெட்வொர்க்கைப் பயன்படுத்துவதைக் குறிக்கிறது. இது பொதுவாக டேப்லெட்டுகள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் போன்ற மொபைல் சாதனங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் PCக்கள், TVகள் மற்றும் கேம் கன்சோல்களுக்கும் இவற்றை பயன்படுத்தலாம். வயர்லெஸ் பிராட்பேண்ட் இணைப்புகளில் மிகவும் பிரபலமான வகைகளை காணலாம்:
ஒய்-ஃபை
ஒய்-ஃபை என்பது பொதுவாகப் பயன்படுத்தப்படும் வயர்லெஸ் இணைய இணைப்பாகும், இது 1300 Mbps வரை வேகத்தை வழங்குகிறது. இது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சாதனங்களுக்கு இடையில் தரவை அனுப்ப ரேடியோ அலைகளைப் பயன்படுத்துகிறது, கேபிள் வழியாக இணைக்கப்படாமல் இணையத்தை அணுக அனுமதிக்கிறது. பெரும்பாலான பயனர்கள் வீட்டில் அல்லது கஃபேக்கள் மற்றும் விமான நிலையங்கள் போன்ற பொது இடங்களில் ஒய்-ஃபை இணைப்பு மூலம் இணையத்தை அணுகுகின்றனர்.
3G/4G
3G மற்றும் 4G ஆகியவை இணைய அணுகலை வழங்க மொபைல் டேட்டாவைப் பயன்படுத்தும் வயர்லெஸ் பிராட்பேண்ட் சேவைகள். அவை பொதுவாக டேப்லெட்டுகள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் போன்ற மொபைல் சாதனங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன, இது 100 Mbps வரை வேகத்தை வழங்குகிறது.
3G சேவைகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன, மேலும் பல வழங்குநர்கள் இப்போது 4G சேவைகளை வழங்குகிறார்கள். 3G-ஐ விட 4G கூடுதல் வேகம் மற்றும் நம்பகமான இணைப்புகளை வழங்குகிறது, இது அன்றாட பயன்பாட்டிற்கு சரியானதாக அமைகிறது.
5G
5G வயர்லெஸ் தொழில்நுட்பம் என்பது வயர்லெஸ் இணைய சேவைகளில் சமீபத்திய முன்னேற்றமாகும், இது 10 Gbps வரை வேகத்தை வழங்குகிறது. இது இன்னும் வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் உள்ளது, ஆனால் நாம் இணையத்தை அணுகும் விதத்தில் புரட்சியை ஏற்படுத்துவதாக உறுதியளிக்கிறது. கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும், 5G ஆனது மிகவும் பரவலாகக் கிடைக்கிறது மற்றும் விரைவில் உலகம் முழுவதும் உள்ள வீடுகள் மற்றும் வணிகங்களுக்கான இணைய இணைப்பு வகையாக மாறும்.
செயற்கைக்கோள்
செயற்கைக்கோள் இணைய பிராட்பேண்ட் பூமியைச் சுற்றியுள்ள புவி ஒத்திசைவு சுற்றுப்பாதையில் உள்ள செயற்கைக்கோள் வழியாக வழங்கப்படுகிறது. 100 Mbps வரை வேகத்தை வழங்கும் கிராமப்புற பகுதிகள் அல்லது பிற பிராட்பேண்ட் வடிவங்கள் இல்லாத பிற தொலைதூர இடங்களுக்கு இது சிறந்தது.
ஸ்டார்லிங்க் (Starlink) என்பது ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) ஆல் வழங்கப்படும் செயற்கைக்கோள் இணைய பிராட்பேண்ட் சேவையாகும். இது 200 Mbps வரை வேகத்தை வழங்குகிறது மற்றும் தற்போது, தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் சோதிக்கப்படுகிறது. நவம்பர் 2022 நிலவரப்படி, Starlink இணையத்தின் சுற்றுப்பாதையில் 3271 செயற்கைக்கோள்கள் உள்ளன. இது அமெரிக்கா மற்றும் கனடாவின் பெரும்பாலான பகுதிகளில் உள்ளது.
பிராட்பேண்ட் இணைப்புகள் பயனர்களுக்கு நம்பகமான, வேகமான மற்றும் பாதுகாப்பான இணைய அணுகலை வழங்குகின்றன. பல்வேறு வகையான வயர்டு மற்றும் வயர்லெஸ் பிராட்பேண்ட் இணைப்புகளைப் புரிந்து கொள்வதன் மூலம், பயனர்கள் தங்கள் தேவைகளுக்கு எந்த வகை சிறந்தது என்பதைப் பற்றிய தகவலறிந்து முடிவை எடுக்கலாம்.
சிறந்த பிராட்பேண்ட் பேக்கேஜை எப்படி தேர்வு செய்வது?
பிராட்பேண்ட் இணையத் தொகுப்பைத் தேர்ந்தெடுக்கும்போது, இணைப்பின் செயல்திறனைப் பாதிக்கும் பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொள்வது அவசியம். பதிவிறக்கம் மற்றும் பதிவேற்ற வேகம், தரவு வரம்புகள், கவரேஜ் பகுதி, செலவு, பயனர் மதிப்புரைகள், வாடிக்கையாளர் சேவை மற்றும் தொழில்நுட்ப ஆதரவு ஆகியவை கருத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்.
பதிவிறக்கம் மற்றும் பதிவேற்ற வேகம்
இணைய இணைப்பின் பதிவிறக்கம் மற்றும் பதிவேற்ற வேகம் கருத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான காரணிகள். அதி வேகம், பயனர்கள் வேகமாக இணையத்தை அணுகவும், வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்யவும் மற்றும் பெரிய ஃபைல்களை பதிவிறக்கவும் உதவும்.
பொதுவாக, பதிவிறக்கத்திற்கான வேகம் குறைந்தது 50 Mbps ஆகவும், பதிவேற்றத்திற்கு 10 Mbps ஆகவும் இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக ஒரே நெட்வொர்க்கில் பல பயனர்கள் இணைக்கப்பட்டிருந்தால், அதிக வேகம் சிறந்த செயல்திறனை வழங்கும்.
மேலும், நெட்வொர்க்கின் நெரிசல் காரணமாக பீக் நேரங்களில் வேகம் குறைக்கப்படலாம். இதேபோல், வயர்லெஸ் இணைப்புகள் வயர்டு இணைப்புகளை விட மெதுவாக இருக்கும். எனவே, பீக் நேரங்களிலும் அல்லது வைஃபையைப் பயன்படுத்தினாலும் நல்ல வேகத்தை உறுதி செய்யும் பேக்கேஜை தேர்வு செய்யவும்.
தரவு வரம்புகள்
இணைய பேக்கேஜைத் தேர்ந்தெடுக்கும்போது, தரவு வரம்புகளைச் சரிபார்க்க வேண்டியது அவசியம். பெரும்பாலான வழங்குநர்கள் வரம்பற்ற தரவுகளுடன் பேக்கேஜ்களை வழங்குகிறார்கள், ஆனால் பயனர்களுக்கு பட்ஜெட் குறைவாக இருந்தால், வரையறுக்கப்பட்ட தரவுகளுடனான பேக்கேஜை தேர்வுசெய்ய விரும்பலாம்.
இணைய பேக்கேஜிற்குப் பதிவு செய்வதற்கு முன், டேட்டா வரம்பை சரிபார்த்து, பயனரின் தேவைகளுக்குப் இது போதுமானது என்பதை உறுதிப்படுத்தவும். பொதுவாக, இணைய உலாவுதல் மற்றும் ஸ்ட்ரீமிங் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு தரவு வரம்பு மாதத்திற்கு குறைந்தது 100 GB இருக்க வேண்டும்.
கவரேஜ் பகுதி
ஒரு பேக்கேஜைத் தேர்ந்தெடுக்கும்போது பிராட்பேண்ட் இணைப்பின் கவரேஜ் பகுதியையும் கருத்தில் கொள்ள வேண்டும். சில வழங்குநர்கள் நாடு தழுவிய கவரேஜுடன் பேக்கேஜ்களை வழங்குகிறார்கள், மற்றவர்கள் குறிப்பிட்ட பகுதிகளில் வரையறுக்கப்பட்ட கவரேஜைக் கொண்டிருக்கலாம்.
இணைப்பு வகை
முன்பே குறிப்பிட்டபடி, DSL, கேபிள் மற்றும் ஃபைபர்-ஆப்டிக் போன்ற பல்வேறு வகையான பிராட்பேண்ட் இணைப்புகள் உள்ளன. ஒவ்வொரு வகைக்கும் அதன் நன்மைகள் மற்றும் தீமைகள் உள்ளன, எனவே பயனர்கள் தங்கள் ஆய்வுகளைச் செய்து, அவர்களின் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதாவது, பயனர்கள் ஃபைபர்-ஆப்டிக் இணைப்புகளை வழங்கும் ஐஎஸ்பி (ISP)-ஐத் தேர்வு செய்ய வேண்டும், ஏனெனில், அவை அதிக வேகத்தையும் சிறந்த நம்பகத்தன்மையையும் வழங்குகின்றன.
விலை
இணைய பேக்கேஜின் விலையையும் கருத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக, இணைப்பின் வேகம் அதிகமாக இருந்தால், அது மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். எனவே, பயனர்கள் வேகம் மற்றும் விலையில் நல்ல சமநிலையை வழங்கும் ஒரு பேக்கேஜைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
பயனர் மதிப்புரைகள்
இணையத் தொகுப்பைத் தேர்ந்தெடுக்கும்போது பயனர் மதிப்புரைகளும் முக்கியம். அவர்கள் தொகுப்பின் செயல்திறன், வாடிக்கையாளர் சேவை மற்றும் ஆதரவைப் பற்றிய நுண்ணறிவை வழங்க முடியும். பயனர் மதிப்புரைகளைப் படிப்பதன் மூலம், எந்த வழங்குநரைத் தேர்வு செய்வது என்பது குறித்த தகவலறிந்து முடிவெடுக்க பயனர்களுக்கு உதவும்.
வாடிக்கையாளர் சேவை மற்றும் தொழில்நுட்ப ஆதரவு
இறுதியாக, பிராட்பேண்ட் இணையத் தொகுப்பைத் தேர்ந்தெடுக்கும்போது நல்ல வாடிக்கையாளர் சேவை மற்றும் தொழில்நுட்ப ஆதரவைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் நம்பகமான வாடிக்கையாளர் சேவை மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்கும் வழங்குநரைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். பயனர்கள் தொழில்நுட்ப ஆர்வலராக இல்லாவிட்டால், இணைப்பை அமைப்பதில் உதவி தேவைப்பட்டால் இது மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
ஒட்டுமொத்தமாக, தேவைகள் மற்றும் பட்ஜெட்டைப் பூர்த்தி செய்யும் ஒன்றைக் கண்டறிய, உள்ளூர் இணைய சேவை வழங்குநர்களிடமிருந்து கிடைக்கும் பல்வேறு பேக்கேஜ்களை ஆராய்வது முக்கியம். பயனர்கள் தங்கள் தேவைகளுக்கு சிறந்த பிராட்பேண்ட் தொகுப்பைத் தேர்வு செய்வதை உறுதிசெய்ய பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
இணைய வேகத்தை எவ்வாறு சரிபார்க்கலாம்?
பயனர்கள் பிராட்பேண்ட் பேக்கேஜைத் தேர்வுசெய்தவுடன், அவர்கள் செலுத்திய பணத்திற்கான மதிப்பை பெறுகிறார்களா என்பதை உறுதிப்படுத்த இணைய வேகத்தை சோதிக்க வேண்டும்.
வேக சோதனைக் கருவியைப் பயன்படுத்தி பயனர்கள் தங்கள் இணைய வேகத்தை சரிபார்க்கலாம். இது இலவச ஆன்லைன் கருவியாக இருக்கலாம் அல்லது இணைய சேவை வழங்குநரால் (ISP) வழங்கப்படும் பிரத்யேக பயன்பாடாக இருக்கலாம். வேகச் சோதனையானது இணைப்பின் பதிவிறக்கம் மற்றும் பதிவேற்ற வேகத்தையும், தாமதம் மற்றும் பிங் வீதத்தையும் அளவிடும்.
வேக சோதனைகளை தவறாமல் இயக்குவதன் மூலம், பயனர்கள் தங்கள் பிராட்பேண்ட் இணைப்பிலிருந்து தாங்கள் எதிர்பார்க்கும் செயல்திறன் பெறுவதை உறுதிசெய்ய முடியும். இணைப்பில் ஏதேனும் சிக்கல்களை விரைவாகக் கண்டறியவும், உதவிக்கு வழங்குநரைத் தொடர்பு கொள்ளவும் இது அவர்களுக்கு உதவும்.
இணைய வேகத்தை சரிபார்க்கும் சில பிரபலமான கருவிகள் Ookla, Fast.com மற்றும் Cloudflare வழங்கும் Speedtest ஆகும். இந்த கருவிகள் அனைத்தும் இலவசம் மற்றும் பயன்படுத்த எளிதானது.
ஊக்லா-வின் வேக சோதனை
ஊக்லா வழங்கும் ஸ்பீட்டெஸ்ட் மிகவும் பிரபலமான வேக சோதனைக் கருவிகளில் ஒன்றாகும். இது வயர்டு மற்றும் வயர்லெஸ் இணைப்புகளுக்கு இலவச இணைய வேக சோதனைகளை வழங்குகிறது. பயனர்கள் இணையதளத்தைப் பார்வையிட வேண்டும் அல்லது அவர்களின் மொபைல் பயன்பாட்டைத் திறந்து சோதனையை இயக்க வேண்டும். இண்டர்ஃபேஸ் லோட் ஆனதும், அவர்கள் சோதனையைத் தொடங்க 'Go' பட்டனை கிளிக் செய்ய வேண்டும். சோதனை முடிவுகள் சில நொடிகளில் காட்டப்படும். இதில் பிங், பதிவிறக்க வேகம் மற்றும் பதிவேற்ற வேகம் ஆகியவை அடங்கும்.
Fast.com
Fast.com என்பது நெட்ஃபிளிக்ஸ் வழங்கும் இலவச இணைய வேக சோதனைக் கருவியாகும், இது துல்லியமான முடிவுகளை வழங்க அதன் சொந்த சேவையகங்களைப் பயன்படுத்துகிறது. இது பயன்படுத்த எளிதானது மற்றும் பதிவு செய்யத் தேவையில்லை. பயனர்கள் இணையதளத்தைப் பார்வையிட்டாலே சோதனை தானாகவே தொடங்கும். சோதனை முடிந்ததும், பயனர்களுக்கு அவர்களின் பதிவிறக்க வேகம் காண்பிக்கப்படும். 'More Info/மேலும் தகவல்' பட்டனை கிளிக் செய்யும் போது, தாமதம் மற்றும் பதிவேற்ற வேகம் போன்ற கூடுதல் தகவல்கள் அவர்களுக்கு வழங்கப்படும்.
கிளவுட்ஃபிளேர் (Cloudflare)
இறுதியாக, கிளவுட்ஃபிளேர் (Cloudflare) மற்றொரு இலவச இணைய வேக சோதனை கருவியாகும். பிங், பதிவிறக்க வேகம், பதிவேற்ற வேகம், ஜிட்டர் மற்றும் பாக்கெட் இழப்பு போன்ற இணைப்பு பற்றிய விரிவான தகவல்களை இது வழங்குகிறது. பயனர்கள் இன்னும் விரிவான வேக சோதனைக் கருவியைத் தேடினால், கிளவுட்ஃபிளேர் (Cloudflare) சிறந்த தேர்வு.
முடிவுரை
பிராட்பேண்ட் என்றால் என்ன? என்ற கேள்விக்கு இந்த வலைப்பதிவு பதிலளித்திருக்கும் என்று நம்புகிறோம். இன்றைய டிஜிட்டல் யுகத்தில், பிராட்பேண்ட் இணைய இணைப்பு என்பது அனைவரின் வாழ்விலும் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டது. இணைய வேகம் மற்றும் செயல்திறனில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துவதால், சரியான பிராட்பேண்ட் பேக்கேஜைத் தேர்ந்தெடுப்பது ஒரு முக்கியமான முடிவாகும். பயனர்கள் தங்கள் விருப்பங்களை முழுமையாக ஆராய்ந்து முடிவெடுப்பதற்கு முன் விலை, இணைப்பு வகை, தரவு வரம்புகள் மற்றும் வாடிக்கையாளர் சேவை போன்ற பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொள்வது முக்கியம்.
மேலும், பயனர்கள் தங்கள் இணைய இணைப்பின் தரத்தை சரிபார்க்க வேக சோதனை கருவியையும் பயன்படுத்த வேண்டும். வெவ்வேறு பயனர்களுக்கு வெவ்வேறு தேவைகள் உள்ளன என்பதை நினைவில் கொள்வது முக்கியம், எனவே பிராட்பேண்ட் பேக்கேஜ்கள் என்று வரும்போது அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒரு தீர்வு இருக்க முடியாது. பயனர்கள் தங்கள் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான ஒன்றைக் கண்டுபிடிக்க நேரம் ஒதுக்குமாறு பரிந்துரைக்கிறோம்.