5ஜி Vs. ஃபைபர்
-
0
-
-
7 minutes
அதிவேக இன்டர்நெட் சேவை கிடைக்கும் ஒரு உலகில் நாம் வாழ்ந்து வருகிறோம். மக்கள் தங்கள் அன்றாட வேலைகள் மற்றும் செயல்பாடுகளைச் செய்வதற்கு இன்டர்நெட்டை அதிகளவில் நம்ப வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். தொழில்நுட்பம் முன்னேறி வருவதால், இன்டர்நெட் என்பது இன்றைய தேவையாக உள்ளது. தேவையான தகவல்களை விரைவாக டவுன்லோடு செய்யவும், எந்த ஒரு தாமதம் அல்லது பஃபர் ஆகாமல் லைவ் வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்யவும் விரும்புகிறார்கள். ஒவ்வொருவரும் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் எந்த தாமதமும் இல்லாமல் பேச ஆசைப்படுகிறார்கள். இது இரண்டு பிரபலமான பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பு தொழில்நுட்பங்கள் உருவாக காரணமானது: 5G மற்றும் ஃபைபர் இன்டர்நெட்.
இந்த இரண்டு பிராட்பேண்ட் தொழில்நுட்பங்களும் தொடக்க நிலையில் இருந்தாலும் கூட, மக்கள் இன்டர்நெட்டைப் பயன்படுத்தும் முறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, 5G மற்றும் ஆப்டிக் ஃபைபர் இன்டர்நெட் இடையே உள்ள வேறுபாடு என்ன, தங்கள் இன்டர்நெட் பிராட்பேண்ட் இணைப்பிற்கு பயனர்கள் எதைத் தேர்வு செய்ய வேண்டும்? இந்த சேவைகளை வழங்கும் இன்டர்நெட் சேவை வழங்குநரைத் (ஐஎஸ்பி/ISP) தேர்ந்தெடுப்பதற்கு முன் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன? இவற்றை நாம் தெரிந்து கொள்ளலாம்.
5G என்றால் என்ன?
5G என்பது வயர்லெஸ் தொழில்நுட்பத்தின் ஐந்தாவது தலைமுறையாகும் மற்றும் இது பயனர்களுக்கு 4G வழங்கும் வேகத்தை விட 10 மடங்கு அதிக டவுன்லோடு வேகத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5G நெட்வொர்க்குகளானது மில்லிமீட்டர் அலைகள், மாபெரும் எம்ஐஎம்ஓ (MIMO) ஆண்டெனா அரேஸ் மற்றும் பீம்ஃபார்மிங் உள்ளிட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பயனர்களுக்கு அதிக டவுன்லோடு மற்றும் அப்லோடு வேகத்தை வழங்குகின்றன. 5G இன்னும் பயன்பாட்டிற்கான ஆரம்ப கட்டத்தில் உள்ளது. மேலும், சில பகுதிகளுக்கு மட்டுமே அதற்கான அணுகல் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இது எதிர்காலத்தில் எல்லா இடங்களிலும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
5G பட்டைகளின் வகைகள்
5G இன்டர்நெட் சேவையானது மூன்று ஃப்ரீகுவென்ஸி பேண்ட்ஸ் மூலமாக இயங்குகிறது: குறைந்த, நடுத்தர மற்றும் உயர் பேண்ட்ஸ். குறைந்த-பேண்ட் ஃப்ரீகுவென்ஸிகள் பொதுவாக 600 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 1 ஜிகாஹெர்ட்ஸ் வரை இருக்கும், அதே சமயம் நடுத்தர-பேண்ட் ஃப்ரீகுவென்ஸிகள் 1 முதல் 6 ஜிகாஹெர்ட்ஸ் வரை இருக்கும். உயர்ந்த-பேண்ட் ஃப்ரீகுவென்ஸிகள் 24 முதல் 40 ஜிகாஹெர்ட்ஸ் என்ற ரேன்ஞ்சில் உள்ளன. மேலும், இவை ஆப்டிக் ஃபைபர் இன்டர்நெட் இணைப்புகளுக்கு போட்டியாக வேகத்தை வழங்குகின்றன.
ஃப்ரீகுவென்ஸி அதிகரிக்கும் போது, 5G வேகமும் அதிகரிக்கிறது. இருப்பினும், உயர்ந்த-பேண்ட் ஃப்ரீகுவென்ஸிகளும் குறுகிய வரம்பைக் கொண்டுள்ளன மற்றும் கட்டிடங்கள், மரங்கள் மற்றும் வானிலை போன்ற தடைகள் காரணமாக குறுக்கீடு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
ஆகவே, புதிய 5G இணைப்பை பெறவிருக்கும் பயனர்கள், சிறந்த வேகம் மற்றும் கவரேஜைப் பெற, பல ஃப்ரீகுவென்ஸி பேண்ட்களை வழங்கும் ஒரு ISPயைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
5G இன்டர்நெட்டின் நிறைகள்
வயர்லெஸ் தொழில்நுட்பத்தின் முந்தைய தலைமுறைகளைக் காட்டிலும் 5G இன்டர்நெட் பல நன்மைகளை வழங்குகிறது. அவற்றுள் சில பின்வருமாறு:
அதிக டவுன்லோட் மற்றும் அப்லோட் வேகம்
4G நெட்வொர்க்குகளுடன் ஒப்பிடும்போது 5G நெட்வொர்க்குகள் 10 மடங்கு அதிக வேகத்தை வழங்குகிறது. இதனால் பயனர்கள் தாமதம் அல்லது பஃபர் பற்றி எந்தவொரு கவலையும் இன்றி அதிக அளவிலான டேட்டாவை விரைவாக டவுன்லோடு செய்யவும், அப்லோடு செய்யவும் முடியும்.
குறைந்த லேட்டன்சி
5G நெட்வொர்க்குகள் குறைந்த லேட்டன்சியை வழங்குகின்றன, அதாவது ஒரு பயனர் ஒரு கோரிக்கையை எழுப்பி அதற்கான பதிலைப் பெறுவதற்கு இடையேயான தாமதம் இதில் குறைவாக இருக்கும். கேமிங், விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் ஸ்ட்ரீமிங் போன்ற உடனடி பதில்கள் தேவைப்படும் அப்ளிகேஷன்களுக்கு இது சிறந்ததாக அமைகிறது.
அதிகரித்த திறன்
முந்தைய தலைமுறை வயர்லெஸ் தொழில்நுட்பத்துடன் ஒப்பிடும்போது 5G நெட்வொர்க்குகளில் ஒரே நேரத்தில் அதிக சாதனங்களை இணைத்து கொள்ளலாம்.
5G இன்டர்நெட்டின் குறைகள்
5G பல நன்மைகளை வழங்கும்போதிலும், 5G இணைப்பைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு பயனர்கள் கருத்தில் கொள்ள வேண்டிய சில குறைபாடுகளும் இருக்கத்தான் செய்கிறது.
வரையிட்ட கிடைக்குந்தன்மை
5G நெட்வொர்க்குகள் இன்னும் பயன்பாட்டிற்கான ஆரம்ப கட்டத்தில் உள்ளதன் காரணமாக இதற்கான அணுகல் சில பகுதிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
குறுக்கீடு
5G நெட்வொர்க்குகளால் பயன்படுத்தப்படும் உயர்ந்த-பேண்ட் ஃப்ரீகுவென்ஸிகளில், கட்டிடங்கள் மற்றும் மரங்கள் போன்ற தடைகள் காரணமாக குறுக்கீடு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
விலையுயர்ந்தது
5G சேவைகள் குறைவான விலையில் கிடைத்ததாலும், பிற பிராட்பேண்ட் தொழில்நுட்பங்களுடன் ஒப்பிடுகையில் இதன் விலை அதிகமாக உள்ளது. ஒரு பொதுவான 5G திட்டமானது ஃபைபர் இன்டர்நெட் திட்டத்துடன் ஒப்பிடும்போது இரண்டு மடங்கு விலை உயர்வானது.
ஃபைபர் ஆப்டிக் இன்டர்நெட் என்றால் என்ன?
ஃபைபர் டு தி ஹோம் (எஃப்டிடிஹெச்/FTTH) என்றும் அழைக்கப்படும் ஃபைபர் இன்டர்நெட் ஒரு வகையான வயர்டு பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பு ஆகும். இது டேட்டாவை அனுப்ப ஃபைபர்-ஆப்டிக் கேபிள்களைப் பயன்படுத்துகிறது. குறைந்த அளவு தகவல்களை எடுத்துச் செல்லும் வழக்கமாக பயன்படுத்தப்படும் செப்பு கம்பிகளைப் போலல்லாமல், ஃபைபர்-ஆப்டிக் கேபிள்கள் அதிக அளவு தகவல்களை அதிக வேகத்தில் கொண்டு செல்லும் திறன் கொண்டவை.
இதற்கான அர்த்தம் பயனர்கள் வழக்கமாக பயன்படுத்தப்படும் செப்பு கம்பிகளை விட அதிக டவுன்லோடு மற்றும் அப்லோடு வேகத்தை பெற முடியும். ஃபைபர் இன்டர்நெட் இணைப்புகள் பயனர்களுக்கு 1 ஜிபிபிஎஸ் வரையிலான வேகத்தை வழங்குகின்றது. நேரடி ஹெச்டி (HD) வீடியோக்களை ஸ்ட்ரீமிங் செய்வதற்கும் ஆன்லைன் கேம்களை விளையாடுவதற்கும் இது சிறந்த வகையில் உதவுகிறது.
பிற இன்டர்நெட் இணைப்புகளை விட ஃபைபர் இன்டர்நெட் அதிக நம்பக தன்மை கொண்டது. குறுக்கீடு ஏற்படுவதிலிருந்து கேபிள்கள் பாதுகாக்கப்படுகின்றன. மேலும், வயர்லெஸ் இணைப்புகளை விட ஃபைபர் இணைப்பு மிகவும் சீராக இருக்கும்.
ஃபைபர் இன்டர்நெட்டின் நிறைகள்
பிற வகை பிராட்பேண்ட் இணைப்புகளை விட ஃபைபர் இன்டர்நெட் பல நன்மைகள் காரணமாக அதிக அளவில் பிரபலமடைந்து வருகிறது:
அதிக வேகங்கள்
ஃபைபர் இன்டர்நெட் 1 Gbps வரையிலான வேகத்தை வழங்கும். இது பாரம்பரிய செப்பு கம்பிகள் அல்லது வயர்லெஸ் இணைப்புகளை விட மிக வேகமாக இருக்கும்.
அதிக நம்பகத் தன்மை
குறுக்கீடு ஏற்படுவதிலிருந்து ஃபைபர்-ஆப்டிக் கேபிள்கள் பாதுகாக்கப்படுகின்றன, அவை வழக்கமாக பயன்படுத்தப்படும் செப்பு கம்பிகள் அல்லது வயர்லெஸ் இணைப்புகளை விட அதிக நம்பகத் தன்மை கொண்டது.
குறைந்த பராமரிப்பு
வழக்கமாக பயன்படுத்தப்படும் செப்பு கம்பிகளை விட ஃபைபர்-ஆப்டிக் கேபிள்களுக்கு குறைவான பராமரிப்பு தேவைப்படுகிறது. இது காலப்போக்கில் அவற்றை செலவு குறைந்த விருப்பமாக மாற்றுகிறது.
ஃபைபர் இன்டர்நெட்டின் குறைகள்
ஏகப்பட்ட நன்மைகளைக் கொண்டிருந்தாலும், ஃபைபர் இன்டர்நெட் ஒரு சில குறைபாடுகளைக் கொண்டுள்ளது. எனவே, இதனை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு பயனர்கள் அவற்றை கருத்தில் கொள்ள வேண்டும்.
அனைத்து இடங்களிலும் கிடைப்பதில்லை
ஃபைபர் இன்டர்நெட் ஒரு சில பகுதிகளில் மட்டுமே கிடைக்கிறது மற்றும் டிஎஸ்எல் (DSL) போன்ற பிற பிராட்பேண்ட் இணைப்புகளை விட இதன் விலை அதிகமாக உள்ளது.
அதிக இன்ஸ்டாலேஷன் செலவு
ஃபைபர் இன்டர்நெட் இணைப்பை இன்ஸ்டால் செய்வதற்கு அதிக பணம் செலவாகும். ஏனெனில், அதற்கு தனித்துவமான உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் தேவைப்படுகிறார்கள். இருப்பினும், பல இன்டர்நெட் சேவை வழங்குநர்கள் நீண்ட கால ஒப்பந்தங்களுக்கு உட்படும் வாடிக்கையாளர்களுக்கு இலவச இன்ஸ்டாலேஷனை வழங்குகிறார்கள்.
கிராமப்புறங்களில் குறைவான வேகம்
ஃபைபர் இன்டர்நெட் 1 ஜிபிபிஎஸ் வேகத்தை வழங்க முடியும் என்றாலும், கிராமப்புறங்களில் இந்த வேகம் எல்லா நேரங்களிலும் கிடைக்காது. தொலைதூர இடங்களில் வசிப்பவர்களுக்கும், அதிக இன்டர்நெட் வேகம் தேவைப்படுபவர்களுக்கும் இது ஒரு பிரச்சனையாக இருக்கலாம்.
5G மற்றும் ஃபைபர் இன்டர்நெட் இடையே ஒரு ஒப்பீடு
ஒரு பயனராக உங்களுக்கு எந்த வகையான இணைப்பு சிறந்தது என்பதைப் புரிந்து கொள்ள, இரண்டு தொழில்நுட்பங்களையும் ஒன்றோடொன்று ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியம்.
பிராட்பேண்ட் வகை
ஆப்டிக் ஃபைபர் ஒரு வயர்டு இன்டர்நெட் சேவையாகும், அதே சமயம் 5G ஒரு வயர்லெஸ் சேவையாகும். இரண்டு தொழில்நுட்பங்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான டவுன்லோடு மற்றும் அப்லோடு வேகத்தை வழங்குகின்றன. ஆனால் ஃபைபர் இன்டர்நெட் அதிக நம்பகத் தன்மை கொண்டது.
தகவல் தொடர்பு தொழில்நுட்பம்
ஃபைபர் இன்டர்நெட்டானது டேட்டாவை அனுப்ப ஒளியைப் பயன்படுத்துகிறது, அதே நேரத்தில் 5G டேட்டாவை அனுப்புவதற்கும் பெறுவதற்கும் ரேடியோ அலைகளைப் பயன்படுத்துகிறது.
வேகம்
ஃபைபர் இன்டர்நெட் இணைப்புகள் பயனர்களுக்கு 10 ஜிபிபிஎஸ் வரை வேகத்தை வழங்குகிறது, அதே நேரத்தில் 5G 20 ஜிபிபிஎஸ் வரை வழங்குகிறது. இருப்பினும், 5G இன் வேகம் பயன்படுத்தப்படும் அதிர்வெண் வரிசையைப் பொறுத்து அமையும். மேலும் இணைப்பைப் பகிர்ந்துகொள்ளும் பயனர்களின் எண்ணிக்கை போன்ற பிற காரணிகளைப் பொறுத்தும் மாறுபடும்.
பொதுவாக, 5G மற்றும் ஆப்டிக் ஃபைபர் ஆகிய இரண்டின் வேகமும் அன்றாட பயன்பாட்டிற்கு போதுமானது, ஆனால் ஃபைபர் மிகவும் நிலையான மற்றும் நம்பகத் தன்மை வாய்ந்த இணைப்பை வழங்குகிறது. அதிக அளவு HD வீடியோவை ஸ்ட்ரீம் செய்ய மற்றும் அதிக வேகத்தில் ஆன்லைன் கேம்களை விளையாட விரும்பும் பயனர்கள் 5Gக்கு பதிலாக ஃபைபரைத் தேர்வுசெய்ய விரும்பலாம்.
ரேன்ஞ்சு & கவரேஜ்
அதிக அதிர்வெண் அலைகள் பயன்படுத்தப்படுவதால் 5G நெட்வொர்க்குகளின் ரேன்ஞ்சானது ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு வரையறுக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் ஃபைபர் நெட்வொர்க்குகள் அதிக தூரம் வரை செல்லக்கூடியது. அதாவது 5G இன்னும் கிடைக்காத பகுதிகளில் வசிக்கும் பயனர்கள் ஃபைபர் இணைப்பைத் தேர்வுசெய்ய வேண்டியிருக்கும் என்பதே இதன் அர்த்தமாகும்.
விலை
5G மற்றும் ஃபைபர் இன்டர்நெட் இணைப்பு ஆகிய இரண்டின் விலையும் சேவை வழங்குநர் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டத்தைப் பொறுத்து அமையும். ஆனால் ஃபைபர் மிகவும் விலை உயர்ந்ததாக உள்ளது. கூடுதலாக, ஃபைபர் இணைப்புகளுடன் இன்ஸ்டாலேஷன் செலவுகளை பயனர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் 5G க்கு பொதுவாக இன்ஸ்டாலேஷன் செலவுகள் கிடையாது.
ஒட்டுமொத்தமாக, அதிக வேகத்தை விரும்பும், அதே சமயம் ஒரு சில சாத்தியமான குறுக்கீடுகள் மற்றும் குறுகிய ரேன்ஞ்சினை பொருட்படுத்தாதவர்களுக்கு 5G ஒரு சிறந்த ஆப்ஷன். இருப்பினும், நம்பகத் தன்மை வாய்ந்த இணைப்பினைத் தேடும் பயனர்கள் ஃபைபர் இன்டர்நெட் இணைப்புகளை தேர்வு செய்ய வேண்டும்.
கிடைக்குந்தன்மை
5G நெட்வொர்க்குகள் இன்னும் பயன்பாட்டிற்கான ஆரம்ப கட்டத்தில் உள்ளன. மேலும் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே 5G சேவைகள் கிடைக்கிறது. ஃபைபர் நெட்வொர்க்குகள் மிகவும் எல்லா இடங்களிலும் கிடைக்கின்றன, ஆனால் அவற்றின் கவரேஜ் ஒவ்வொரு பகுதியிலும் மாறுபடும்.
எதிர்காலத்தில், 5G மற்றும் ஃபைபர் நெட்வொர்க்குகள் ஆகிய இரண்டும் எல்லா இடங்களிலும் கிடைக்கும். இது சிறந்த வேகம் மற்றும் நம்பகத் தன்மை வாய்ந்த இணைப்புகளைப் பெற விரும்பும் பயனர்களுக்கு சிறந்த ஆப்ஷனாக இருக்கும்.
நம்பகத் தன்மை
நம்பகத்தன்மைக்கு வரும்போது, குறுக்கீடுகள் ஏற்படுவதிலிருந்து கேபிள்கள் பாதுகாக்கப்படுவதால், ஃபைபர் இன்டர்நெட் 5G ஐ விட அதிக நம்பகத் தன்மை வாய்ந்தது. 5G நெட்வொர்க்குகள் கட்டிடங்கள், மலைத்தொடர்கள் அல்லது மரங்கள் போன்ற இடையீடுகளால் பாதிக்கப்படலாம், அதே சமயம் ஃபைபர் நெட்வொர்க்குகள் அத்தகைய இடையீடுகளால் பாதிக்கப்படாது. ஃபைபர் இன்டர்நெட் வயர்டு இணைப்பாக உள்ளதால் 5G ஐ விட மிகவும் சீரான வேகத்தைக் கொண்டுள்ளது.
பதிலளிக்கும் நேரங்கள்
5G நெட்வொர்க்குகளில் அதிக அதிர்வெண் அலைகள் பயன்படுத்தப்படுவதால் ஃபைபரை விட மெதுவான பதிலளிக்கும் நேரம் உள்ளது. ஃபைபர் நெட்வொர்க்குகள் வயர்டு இணைப்பாக உள்ளதால் விரைவான பதிலளிக்கும் நேரத்தைக் கொண்டுள்ளன. எனவே, ஆன்லைன் கேமிங் போன்ற விரைவான பதிலளிக்கும் நேரம் தேவைப்படும் அப்ளிகேஷன்களுக்கு இதுவே சிறந்தது.
பாதுகாப்பு
ஃபைபர் மற்றும் 5G நெட்வொர்க்குகள் இரண்டும் பாதுகாப்பான இணைப்புகள் தான். எனினும் ஃபைபர் இன்டர்நெட் பொதுவாக கம்பியில் வழங்கப்படுவதால் இது மிகவும் பாதுகாப்பானது. ஃபைபர் நெட்வொர்க்குகள் 5G நெட்வொர்க்குகளை விட ஹேக்கிங் மற்றும் பிற பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு குறைவாகவே பாதிக்கப்படும் என்பதே இதன் அர்த்தம்.
பயனீட்டாளர் இணையதளச் சேவையாளருக்கு எளிதில் கிடைத்தல்
பயனீட்டாளர் இணையதளச் சேவையாளர் இணைப்பு நிலை என்பது ஐஎஸ்பி மற்றும் பயனரின் வீடு அல்லது அலுவலகத்திற்கு இடையே உள்ள தொடர்பைக் குறிக்கிறது. ஃபைபர் நெட்வொர்க்குகளுக்கு கிடங்குகளைத் தோண்டுவது மற்றும் கேபிள்களை இடுவது போன்ற சில இன்ஸ்டாலேஷன் தேவைப்படுகிறது, அதே நேரத்தில் 5G இணைப்புகளை விரைவாகவும் எளிதாகவும் அமைக்கலாம்.
5G மற்றும் ஃபைபர் தொடர்பான தெரிந்து கொள்ள வேண்டிய இன்டர்நெட் சார்ந்த வார்த்தைகள்
இன்டர்நெட்
5G மற்றும் ஃபைபர் இன்டர்நெட்டுடன் தொடர்புடைய முக்கிய இன்டர்நெட் சார்ந்த வார்த்தைகளை அறிந்திருப்பது அவசியம். இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை பயனர்கள் புரிந்து கொள்ள இது உதவும். அவற்றில் மிக முக்கியமான சில பின்வருமாறு:
அலைவரிசை
இது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு நெட்வொர்க்கில் அனுப்பப்படும் மற்றும் பெறக்கூடிய டேட்டாவின் அளவு ஆகும். ஃபைபர் இணைப்புகள் பொதுவாக 5G நெட்வொர்க்குகளை விட அதிக அலைவரிசையை வழங்குகின்றன.
லேட்டன்சி
இது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு நெட்வொர்க்கில் அனுப்பப்படும் மற்றும் பெறக்கூடிய டேட்டாவின் அளவு ஆகும். ஃபைபர் இணைப்புகள் பொதுவாக 5G நெட்வொர்க்குகளை விட அதிக அலைவரிசையை வழங்குகின்றன.
அப்லோடு/டவுன்லோடு வேகம்
இது ஒரு நெட்வொர்க்கில் டேட்டா அனுப்பப்படும் மற்றும் பெறப்படும் வேகம் ஆகும். ஃபைபர் நெட்வொர்க்குகள் பொதுவாக 5G நெட்வொர்க்குகளை விட அதிக வேகத்தை வழங்குகின்றன.
இன்டர்நெட் சேவை வழங்குநர் (ஐஎஸ்பி/ISP)
வாடிக்கையாளர்களுக்கு இன்டர்நெட் அணுகலை வழங்கும் ஒரு நிறுவனம் ஐஎஸ்பி எனப்படும்.
மொபைல் நெட்வொர்க் ஆபரேட்டர்(எம்என்ஓ/MNO)
எம்என்ஓ என்பது 5G சேவைகள் போன்ற மொபைல் சேவைகளை வழங்கும் ஒரு நிறுவனமாகும்.
பயனீட்டாளர் இணையதளச் சேவையாளர் இணைப்பு
இது ஒரு ஐஎஸ்பி மற்றும் பயனரின் வீடு அல்லது அலுவலகத்திற்கு இடையேயான இணைப்பு ஆகும். ஃபைபர் நெட்வொர்க்குகளுக்கு ஒரு சில இன்ஸ்டாலேஷன் தேவைப்படுகிறது, அதே சமயம் 5G இணைப்புகளை விரைவாகவும் எளிதாகவும் அமைக்கலாம்.
வயர்டு இணைப்பு
இது ஃபைபர் கேபிள் போன்ற இரண்டு புள்ளிகளுக்கு இடையே உள்ள வெளித்தோற்ற இணைப்பு. 5G போன்ற வயர்லெஸ் இணைப்புகளுக்கு எந்த ஒரு வெளித்தோற்ற இணைப்பும் தேவைப்படாது.
5G அல்லது ஃபைபர் இன்டர்நெட்: எதைப் பெறுவது?
வேகம், நம்பகத்தன்மை, ரேன்ஞ் மற்றும் கவரேஜ், செலவு, கிடைக்கும் தன்மை மற்றும் பாதுகாப்பு போன்ற தேவைகளைப் பொறுத்து பயனர் 5G மற்றும் ஃபைபர் இன்டர்நெட் ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யலாம். வீட்டில் அதிக வேகத்துடன் நம்பகத் தன்மை வாய்ந்த இணைப்பு தேவைப்படும் பயனர்களுக்கு, ஃபைபர் இன்டர்நெட் சிறந்த தேர்வாக இருக்கலாம். இருப்பினும், 5G ஆனது பயனர்களுக்கு அதிக வேகம் மற்றும் பயணத்தின்போது எளிதான செட்டப்பை வழங்குவதன் மூலம் அதிக நம்பகத் தன்மை வாய்ந்த இணைப்பு தேவையில்லாதவர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. முடிவில், எந்த வகையான இன்டர்நெட் இணைப்பைப் பெறுவது என்பதை முடிவெடுக்க பயனர்கள் தங்களது தேவைகளையும் பட்ஜெட்டையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
முடிவுரை
5G மற்றும் ஃபைபர் இன்டர்நெட் இணைப்புகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகளைப் புரிந்துகொள்ள இந்தப் பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறோம். தேவைகள் மற்றும் பட்ஜெட்டைப் பொறுத்து இரண்டில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம். எனினும் இரண்டுமே சிறந்த வேகம் மற்றும் நம்பகத்தன்மையை வழங்குகின்றன.
தங்களது வீட்டில் அதிக வேகத்துடன் நம்பகத் தன்மை வாய்ந்த இணைப்பு தேவைப்படும் பயனர்களுக்கு ஃபைபர் இன்டர்நெட் இணைப்பு சிறந்தது. அதே நேரத்தில் பயணத்தின் போது அதிக வேகம் தேவைப்படுபவர்களுக்கு மற்றும் எளிமையான செட்டப் தேவைப்படுபவர்களுக்கு 5G சிறந்தது. பயனர்கள் எந்த இன்டர்நெட் இணைப்பைப் தேர்வு செய்தாலும், அவர்கள் அது குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டு, அதைச் செய்வதற்கு முன் அதிலுள்ள நிறை மற்றும் குறைகளை எடைப்போட்டு பார்க்க வேண்டும். இது அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப சிறந்த ஒரு இணைய இணைப்பைப் பெறுவதற்கு உதவியாக இருக்கும்.