பணம் செலுத்துவதற்கான 4 எளிய வழிகள்- இந்தி_தெலுங்கு_ தமிழ் சுருக்கம்
-
0
-
-
4 minutes
பில் கட்டவும்
ACT ஃபைபர்நெட் பில்-ஐ ஆன்லைனில் கட்டுவதற்கான 4 எளிய வழிமுறைகள்
ரொக்கப்பணம் பயன்படுத்தாத டிஜிட்டல் இந்தியா முறை பிரபலமாக உள்ள இந்த காலத்தில், உங்களது மாதாந்திர பிராட்பேண்ட் கட்டணத்தை நேரடியாகப் பணமாகச் செலுத்துவதைத் தவிர, வேறு எந்தெந்த வழிகளில் கட்டலாம் என்று நீங்கள் தேடித் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் ACT ஃபைபர்நெட் பில்-ஐ கட்டுவதற்கான வெவ்வேறு வழிமுறைகளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? ஆன்லைனில் பில் கட்டணத்தைச் செலுத்துவது தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருக்கின்றனவா? நேரடியாக வந்து கட்டணத்தை வசூலிக்கும் கட்டணமுறையைத் தவிர, நீங்கள் சௌகரியமாகக் கட்டணம் செலுத்துவதற்காகப் பல ஏற்கத்தக்க எளிய கட்டண வழிமுறைகளை நாங்கள் உங்களுக்காக வழங்குகிறோம்.
ஏன் ரொக்கமில்லாத பரிவர்த்தனையை மேற்கொள்ள வேண்டும்?
பல பயனர்கள் தற்போது, பல்வேறு தளங்களின் மூலமாக, தங்களின் வசதிக்கேற்ப, ஆன்லைனில் கட்டணங்களைச் செலுத்துகிறார்கள். ஏனென்றால், அது அவர்களுக்குப் பணம் செலுத்துவதற்குச் சௌகரியமாக உள்ளது. நடுராத்திரியிலோ அல்லது ரயில் வண்டியில் பயணித்துக் கொண்டிருக்கும்போதோ, நீங்கள் உங்கள் கட்டணத்தைச் சுலபமாகச் செலுத்தலாம். பல்வேறு டிஜிட்டல தளங்கள் அளிக்கின்ற எளிதில் அணுகக்கூடிய தன்மை, படிப்படியாக அனைவரும் விரும்புகின்ற ஒரு கட்டணம் செலுத்தும் முறையாக ஆன்லைன் பில் செலுத்தும் முறையை மாற்றிவிட்டது.
ACT-யின் சொந்த வலைத்தளம் மற்றும் மொபைல் ஆப் மட்டுமின்றி, எங்கள் பார்ட்னர்களின் மூலமாகவும் நீங்கள் கட்டணம் செலுத்தலாம், அவர்களின் இ-வாலட்களை பயன்படுத்துவதன் மூலம் தள்ளுபடிகள்/கேஷ்பேக்*-களை நீங்கள் பெறலாம்.நீங்கள் ரொக்கமில்லா கட்டணம் செலுத்தும் முறையைத் தேர்ந்தெடுத்து, உங்கள் சௌகரியத்திற்கேற்ப கட்டணத்தை முழு சுதந்திரத்துடன் செலுத்தி மகிழுங்கள்.
ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கு என்னென்ன வழிமுறைகள் உள்ளன?
நீங்கள் தடையற்ற-நம்பமுடியாத அதிவேக ACT ஃபைபர்நெட்டை அனுபவித்து மகிழ்ந்திட, அதற்கான கட்டணத்தை நீங்கள் சௌகரியமாகச் செலுத்தக்கூடிய கட்டணமுறையை, நாங்கள் கீழே பட்டியலிட்டுள்ள பல்வேறு விதமான இ-வழிமுறைகளிலிருந்து நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்:
1. ACT மொபைல் ஆப்: எங்களைப் போலவே நீங்களும் ஸ்மார்ட் போன்-ஐ நேசிப்பவராக இருந்தால், உங்களுக்கு எங்களின் மொபைல் ஆப் மிகவும் பிடிக்கும். ACT ஃபைபர்நெட் ஆப் என்பது உங்களுடைய அனைத்து ACT கணக்கு நிர்வாகத் தேவைகளுக்குமான ஒரே இடமாகும். புது இணைப்பு பெறுவது, கட்டணத்தைச் செலுத்துவது, உங்கள் டேட்டா பயன்பாட்டை கண்காணிப்பது, தற்போதுள்ள பிளான்-உடன் கூடுதல் சேவைகளுக்கு(add-ons) வேண்டிக் கொள்வது, தற்போதைய பிளானை மாற்றியமைப்பது, சேவை கோரிக்கைகளைப் பதிவு செய்வது மற்றும் கண்காணிப்பது போன்ற அனைத்தையும் இந்த ஒரு ஆப் மூலம் நீங்கள் செய்ய முடியும்.
உங்களின் விரல் நுனியிலேயே வாடிக்கையாளர் சேவையைப் பெற முடியும்! இது உங்களுடைய அதிவேக இன்டர்நெட் இணைப்பிற்கு உதவும், ஒரு அற்புதமான ஆப் ஆகும்.
முதன் முதலில் இந்த ஆப்-ஐ நீங்கள் பயன்படுத்தும் போது, உங்களுடைய லாக்-இன் தகவல்களை நீங்கள் உள்ளிடுமாறு கேட்கப்படும். அது முடிந்தவுடன், உங்களுடைய தற்போதைய பில் விபரங்கள் மற்றும் பாக்கித்தொகை (ஏதேனும் இருந்தால்) போன்றவை காட்டப்படும். நீங்கள் “பாக்கித் தொகையைச் செலுத்தவும்”, “கட்டணம் செலுத்தவும்”, அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்புகள் உங்களிடம் இருந்தால் கட்டணம் செலுத்த வேண்டிய இணைப்பைத் தேர்ந்தெடுத்து, “-இற்காக கட்டணம் செலுத்தவும்” என்பதைத் தேர்ந்தெடுக்கலாம்.
பில் கட்டணம் செலுத்துவதற்கு, மொபைல் ஆப்-இல் “பில்-ஐ கட்டவும்” என்பதை கிளிக் செய்தால், பாக்கித் தொகையைக் காட்டும். நீங்கள் “தொடரவும்” என்பதை கிளிக் செய்து கட்டணத்தைச் செலுத்த விரும்பினால், கிரெடிட்/டெபிட் கார்டு, நெட் பாங்கிங் அல்லது ஏதேனும் வாலட் மூலம் நீங்கள் கட்டணத்தைச் செலுத்தலாம்.
ஆப்-ஐ பதிவிறக்கம் செய்யவும்
2. ACT போர்ட்டல்: ACT போர்ட்டல் மூலமாக நீங்கள் உங்களுடைய இண்டர்நெட்-ஐ அணுகிடும் போது, உங்களுடைய கட்டணங்கள், பயன்பாட்டு வரலாறு, சப்ஸ்கிரிப்ஷன்கள் மற்றும் பயனர் கணக்கு போன்றவற்றை போர்ட்டல் ஹோம்பேஜிலிருந்தே நீங்கள் நிர்வகிக்கலாம். உங்களுடைய பிளான் விபரங்கள், முந்தைய பாக்கிகள், தற்போதைய இன்வாய்ஸ் தொகை, உங்கள் கணக்கிலுள்ள டாப்-அப் அட்வான்ஸ் தொகை போன்றவற்றைச் சரிபார்ப்பதற்கும் மற்றும் பாக்கித்தொகை ஏதேனும் இருந்தால் கட்டுவதற்கும், ஹோம்பேஜின் இடப்பக்க பேனலில் “பில்-ஐ கட்டவும்” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதிலும் கூட, நீங்கள் உங்கள் கிரெடிட்/டெபிட் கார்டு, நெட் பேங்கிங் அல்லது வாலட் மூலம் உங்கள் கட்டணத்தைச் செலுத்தலாம்.
3. ACT வலைத்தளம்: ஏதேனும் கட்டண பாக்கியைச் செலுத்துவதற்கு, www.actcorp.in என்னும் வலைத்தளத்தில் லாக்-இன் செய்து, வலப்பக்க மெனுவில், பில் பேமெண்ட் என்பதை கிளிக் செய்யவும். அல்லது, நீங்கள் https://selfcare.actcorp.in/payments/external-bills என்ற பக்கத்திற்கு நேரடியாகச் சென்று, உங்களுடைய நகரத்தைத் தேர்ந்தெடுத்து, உங்கள் சப்ஸ்கிரைபர் ஐடி-ஐ உள்ளிட்டுக் கட்டணத்தைச் செலுத்தத் தொடரலாம். இதில் உங்களது கணக்கு விவரங்கள் மற்றும் ஏதேனும் பாக்கித் தொகை நிலுவையில் இருந்தால் காட்டப்படும்.
நீங்கள் எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டுமென்பதைத் தேர்வு செய்ய “பாக்கித் தொகையைச் செலுத்தவும்” அல்லது “மற்ற தொகையைச் செலுத்தவும்” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். கூப்பன் கோட்-ஐ (உங்களிடம் இருந்தால்) உள்ளிட்டுச் சலுகைகளை பெறுவதற்கான வாய்ப்பும் அதில் கொடுக்கப்பட்டிருக்கிறது. “தொடரவும்” என்பதை நீங்கள் கிளிக் செய்தவுடன், பணம் செலுத்தும் தளத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறது, இங்கே கிரெடிட்/டெபிட் கார்டு, நெட் பாங்கிங் அல்லது ஏதேனும் வாலட் மூலம் நீங்கள் கட்டணத்தைச் செலுத்தலாம். மேலும், இதன் மூலம் நீங்கள் கட்டணத்தைச் செலுத்தியது, வெறும் மூன்றே ஸ்டெப்களில் உறுதி செய்யப்படுகிறது.
4. ஃப்ரீசார்ஜ்/மொபிக்விக்/பேடிஎம்: எங்களுடைய பார்ட்னர்களான ஃப்ரீசார்ஜ்/மொபிக்விக்/பேடிஎம் மூலமாகவும் நீங்கள் ஆன்லைனில் கட்டணம் செலுத்தலாம். இந்த வலைத்தளங்களில் லாக்-இன் செய்து, உங்களுடைய பயனர் பெயர்/சப்ஸ்கிரைபர் ஐடி/கணக்கு எண் போன்றவற்றை உள்ளீடு செய்து உங்களுடைய பாக்கித்தொகை/ தற்போதைய பில் போன்ற விபரங்களை நீங்கள் பெறலாம். இந்த வலைத்தளங்களில் ஏதேனும் ஒன்றில் உங்களுக்கு ஏற்கனவே கணக்கு இருந்தால், நெட் பாங்கிங், கிரெடிட்/டெபிட் கார்டு அல்லது வாலட் இருப்பின் மூலம், விரைவான மற்றும் பாதுகாப்பான முறையில் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.
பாக்கித்தொகையை செலுத்துவதற்கான லிங்க்-கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
ஃப்ரீசார்ஜ்
மொபிக்விக்
பேடிஎம்
ஒரு வேளை பரிவர்த்தனை தோல்வியடைந்தால் என்ன செய்வது?
பரிவர்த்தனை தோல்வியடைந்து விடும் பட்சத்தில், தயவு செய்து உங்களுடைய வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டிருக்கிறதா என்பதைச் சரிபார்க்கவும். ஒரு வேளை பணம் எடுக்கப்படவில்லையென்றால், நீங்கள் மேற்சொன்ன கட்டண முறைகளில் ஏதேனும் ஒன்றினை பயன்படுத்தி, கட்டணம் செலுத்துவதற்கு மீண்டும் முயலலாம் என்பதைத் தயவு செய்து நினைவில் கொள்ளவும். ஒருவேளை வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டிருந்தால், தயவு செய்து எங்களுடைய வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொள்ளவும் அல்லது எங்கள் மொபைல் ஆப்-பின் மூலமாக உங்கள் பிரச்சனையைப் புகாராகத் தெரிவிக்கவும்(raise a ticket). அப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண, நாங்கள் உங்களுக்கு உதவி செய்வோம்.
ஆன்லைனில் பணம் செலுத்துவது பாதுகாப்பானதா?
நிச்சயமாக! 2016-இன் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, இந்தியாவில் ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவது அதிகரித்துள்ளது. OTP அல்லது PIN பயன்படுத்தி கட்டணம் செலுத்தும் போது, பேமெண்ட் கேட்வே-க்கள் மற்றும் டிஜிட்டல் வாலட்கள் போன்றவை இன்னும் அதிகப்படியான பாதுகாப்பினை அளிக்கிறது. அனைத்து ஆன்லைன் பரிவர்த்தனைகளும் SSL இணைப்பின் மூலமாக மறைக்குறியீடாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. எனவே, உங்களுடைய வங்கி விபரங்கள் எதுவும் மூன்றாம் தரப்பினரிடம் ஒரு போதும் பகிரப்படுவதில்லை.
உங்களுடைய ACT அனுபவம் அல்லது ஆன்லைன்-இல் பில் செலுத்துவது தொடர்பான நாங்கள் இங்கே குறிப்பிடாத பிரச்சனைகள் ஏதேனும் உங்களுக்கு இருப்பின், தயவு செய்து எங்களுடன் பகிர்ந்து கொள்ளவும். உங்களுடைய பிரச்சனைகளைத் தீர்க்க உதவுவதில் மகிழ்ச்சியடைகிறோம்.
உங்கள் வீட்டிலிருந்தபடியே எளிதாக, உங்கள் பில்களை ஆன்லைனில் செலுத்துங்கள் மற்றும் அதிவேக ACT ஃபைபர்நெட் மூலம் தடையின்றி ஒளிபரப்பாகும் உங்களுக்குப் பிடித்த எபிசோட்-களை இடைவிடாது பார்த்து மகிழுங்கள்!
*மூன்றாம் தரப்பினர்களான ஃப்ரீ சார்ஜ்/மொபிகிவிக்/பேடிஎம் மற்றும் பிறர் வழங்கும் கேஷ்பேக்/ப்ரோமோ ஆஃபர்கள்/தள்ளுபடிகள் ஆகியவற்றின் மீதான எந்தவொரு கோரல்களுக்கும் ACT பொறுப்பேற்காது.