SD-WAN மாற்றம்
-
0
-
-
7 minutes
பெரும்பாலான பிசினஸூகள் தங்களது வைடு ஏரியா நெட்வொர்க் (WAN) அமைப்புகளில் அதிக விலை, வழங்குதலில் நெகிழ்வின்மை மற்றும் பிரச்சினைகளை கண்டுபிடித்து நிர்வகித்தல் போன்ற சிக்கல்களை அனுபவிக்கின்றனர். சாஃப்ட்வேர் டிஃபைன்டு WAN (SD-WAN) என்பது நெகிழ்வுத்தன்மை, எளிமையாக நிர்வகித்தல் மற்றும் பணம் சேமிப்பு போன்றவற்றை வழங்குவதன் மூலம் இது போன்ற சவால்களை சமாளிக்க உதவுகிறது.
எனினும், SD-WAN-ல் டிரான்சிஷன் செய்வது ஒரு சிக்கலான காரியம் மட்டுமன்றி அதனை தவறாக செய்துவிட்டால் குறைவான செயல்திறன் மற்றும் அவுட்டேஜிற்கு கூட வழிவகுக்கும். எனவே, பிசினஸூகள் SD-WAN-ல் டிரான்சிஷன் செய்வதற்கு முன்பு பல விதமான கருதுகோள்களை மனதில் கொள்ள வேண்டும்.
SD-WAN என்றால் என்ன?
SD-WAN என்பது நிறுவனங்களை தங்களது வைடு ஏரியா WANகளை திறம்படவும் திறைமையாகவும் நிர்வகிக்க உதவும் ஒரு வகை நெட்வொர்க்கிங் ஆகும். SD-WAN-ஐப் பயன்படுத்தி நிறுவனங்களால் நெட்வொர்க் சிக்கல்கள் மற்றும் அது சார்ந்த செலவுகளை குறைக்கவும், அதிகரித்த செயல்திறன், பல்வேறு WAN லின்க்குகளில் டிராஃபிக் ஃபுலோவை கட்டுப்படுத்தல், மாறிவரும் பிசினஸ் தேவைகளுக்கு ஏற்றவாறு விரைவாக பதில்களை மாற்றியமைத்தல் மற்றும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு போன்றவற்றை செய்ய முடியும். SD-WAN என்பது நிறுவனங்கள் செலவுகளைக் குறைக்கும் அதே வேளையில் தங்கள் நெட்வொர்க்குகளை விரை திறன் கொண்டதாகவும், பதிலளிக்கக்கூடியதாகவும் மாற்ற விரும்பும் ஒரு முக்கியமான கருவியாகும்.
டிரான்சிஷன் செயல்முறையின்போது சந்திக்க நேரிடும் சவால்கள்
பாரம்பரியமான WAN அமைப்பிலிருந்து SD-WAN க்கு மாறுவது ஒரு சிக்கலான செயல்முறையாகும். இந்த டிரான்சிஷனை செய்வதற்கு முன் நிறுவனங்கள், அவற்றின் தற்போதைய அமைப்பு, செயல்திறன் இலக்குகள் மற்றும் பாதுகாப்புத் தேவைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். கூடுதலாக, டிரான்சிஷனின் போது ஏற்படக்கூடிய சில சவால்கள் பின்வருவமாறு:
அனைத்து கூறுகளும் SD-WAN தொழில்நுட்பத்துடன் இணக்கமாக இருக்கிறதா என்பதை அறிதல்
தற்போதுள்ள நெட்வொர்க் கூறுகளான ரவுட்டர்கள், ஃபயர்வால்கள் மற்றும் சுவிட்சுகள் போன்றவை SD-WAN சேவை வழங்குநர்கள் இணக்கமாக இருக்கிறதா என்பதை நிறுவனங்கள் உறுதிசெய்ய வேண்டும். இந்த கூறுகள் இணக்கமாக இல்லாவிட்டால், டிரான்சிஷன் செயல்முறையானது அதிக சிக்கலானதாகவும் விலை உயர்ந்ததாகவும் மாறிவிடும்.
தங்களது நெட்வொர்க்கிற்கு சிறந்த அமைப்பை கண்டுபிடித்தல்
நிறுவனங்கள் தங்களது SD-WAN-ற்கு ஓவர்லே அல்லது அன்டர்லே நெட்வொர்க் வேண்டுமா என்பதை தேர்வு செய்ய வேண்டும். இந்த இரண்டு அமைப்புகளுக்கு இடையே உள்ள வித்தியாசங்களை நன்றாக புரிந்துகொள்வதன் மூலமாக நிறுவனங்கள் சிறந்த நெட்வொர்க் தேர்வை செய்ய முடியும்.
புதிய அமைப்பிற்கு ஆதரவு வழங்கவும், நிர்வகிக்கவும் வளங்களை ஒதுக்குதல்
பிசினஸுகள் தங்கள்து SD-WAN அமைப்பிற்கு ஆதரவு வழங்கவும் நிர்வகிக்கவும் தேவையான வளங்களை ஒதுக்க வேண்டும். தங்களின் SD-WAN அமைப்பின் சீரான டிரான்சிஷன் மற்றும் வெற்றி பெறுவதற்கு தோதான சரியான பணியாளர்கள், செயல்முறைகள் மற்றும் கருவிகளை கொண்டிருத்தல் போன்றவை இதில் அடங்கும். நிறுவனத்திற்கு தேவையான வளங்கள் அல்லது நிபுணத்துவம் இல்லாவிட்டால், இது போன்ற வேலைகளை தேர்டு-பார்ட்டி வழங்குநரிடம் அவுட்சோர்ஸ் செய்வது நல்லது.
SD-WAN சூழலுக்குள் ஏற்கனவே இருக்கும் செயலிகளை ஒருங்கிணைத்தல்
நிறுவனங்கள் தங்களிடம் ஏற்கனவே இருக்கக்கூடிய செயலிகள் புதிய SD-WAN அமைப்புடன் இணக்கமாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். இந்தச் செயல்முறைக்கு ஏற்றவாறு, அமைப்புகளை மாற்றம் செய்வது அல்லது இணக்கத்தன்மையை உறுதிப்படுத்த நெறிமுறைகளைப் புதுப்பித்தல் போன்ற கூடுதல் அமைப்புகள் தேவைப்படலாம்.
திறமைமிகு பாதுகாப்பு நெறிமுறைகளை செயலாக்கம் செய்தல்
SD-WAN நெட்வொர்க்குகளைப் பாதுகாப்பது அவசியமான ஒன்று. ஏனெனில் இந்த நெட்வொர்க்குகள் அடிக்கடி சைபர் தாக்குதல்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. நிறுவனங்கள் தங்கள் நெட்வொர்க்குகளை அங்கீகரிக்கப்படாத அணுகலில் இருந்து பாதுகாக்க டேட்டா என்க்கிரிப்ஷன் மற்றும் மல்டி-ஃபேக்டர் ஆதன்டிகேஷன் போன்ற வலுவான பாதுகாப்பு நெறிமுறைகளை செயல்படுத்த வேண்டும்.
சிறந்த முடிவை உறுதி செய்ய, டிரான்சிஷன் செயல்முறையைத் தொடங்குவதற்கு முன், நிறுவனங்கள் ஏற்படக்கூடிய மேற்கூறிய சாத்தியமான சவால்களை தீவிரமாகக் கருத்தில் கொள்ள வேண்டும்.
டிரான்சிஷன் செயல்முறையானது தொடர்ச்சியானது என்பதையும், தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் முன்னேற்றத்தை உள்ளடக்கியது என்பதைப் புரிந்துகொள்வதும் முக்கியம். தங்கள் SD-WAN நெட்வொர்க் என்பது நீண்ட காலத்திற்கு பாதுகாப்பானதாகவும், நம்பிக்கை உடையதாகவும், செலவு குறைந்ததாகவும் இருப்பதை உறுதிசெய்ய, ஏதேனும் சாத்தியமான சிக்கல்களை நிர்வகிப்பதற்கும் தீர்ப்பதற்கும் நிறுவனங்கள் ஒரு திட்டத்தை கொண்டிருக்க வேண்டும்.
SD-WAN டிரான்சிஷனுக்கான முக்கிய கருதுகோள்கள்
SD-WAN -க்கு டிரான்சிஷன் செய்யும்போது, நிறுவனங்கள் பல முக்கிய காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். அவை பின்வருமாறு:
ஓவர்லே மற்றும் அன்டர்லே நெட்வொர்க்குகளுக்கு இடையே முடிவு செய்தல்
SD-WAN-க்கு டிரான்சிஷன் செய்யும்போது, நிறுவனங்கள் அதை எவ்வாறு செயல்படுத்தப் போகிறோம் என்பதையும், அது ஓவர்லே மற்றும் அன்டர்லே நெட்வொர்க்கா என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இரண்டு அணுகுமுறைகளுக்கு இடையிலான முக்கிய வேறுபாடுகள் பின்வருமாறு:
ஓவர்லே நெட்வொர்க்குகளுக்கான முக்கிய கருதுகோள்கள்
ஒரு ஓவர்லே நெட்வொர்க் என்பது ஏற்கனவே இருக்கக்கூடிய பிசிக்கல் WAN அமைப்பின் மேல் இயங்குகிறது. மேலும் ஏற்கனவே இருக்கும் ஹார்டுவேரில் எந்த மாற்றமும் தேவையில்லை. இந்த வகை செயலாக்கத்தின் நன்மை என்னவென்றால், இது SD-WAN உடன் ஒப்பிடுகையில் விரைவான மற்றும் எளிதான மாற்றத்தை வழங்குகிறது. இயல் மாற்றங்கள் இல்லாததால் பாதுகாப்பு சார்ந்த அபாயங்கள் மற்றும் செயல்திறன் சிக்கல்கள் அடிக்கடி ஏற்பட வாய்ப்பு இருப்பதே இதிலுள்ள குறைபாடு ஆகும்.
அன்டர்லே நெட்வொர்க்குகளுக்கான முக்கிய கருதுகோள்கள்
அன்டர்லே நெட்வொர்க்குகள் ஏற்கனவே உள்ள ஹார்டுவேர் மற்றும் அமைப்பில் மாற்றங்களைச் செய்வது அடங்கும். எனவே, டிரான்சிஷன் செயல்முறை செய்வதற்கு அதிக நேரம் எடுக்கும் மற்றும் அதற்கு அதிக முன் முதலீடு தேவைப்படுகிறது. எனினும், SD-WAN ஐ ஒரு அன்டர்லே நெட்வொர்க்காக செயல்படுத்துவதன் நன்மை என்னவென்றால், அது அதிக பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை வழங்கும். கூடுதலாக, அனைத்து ஹார்டுவேர்களும் நிலையான ஆப்பரேட்டிங் சிஸ்டமிற்கு அப்டேட் செய்யப்பட்டிருப்பதால், நிறுவனங்கள் தங்கள் நெட்வொர்க்குகளை அதிக அளவில் கட்டுப்படுத்தலாம் மற்றும் சிக்கல்களை விரைவாக செயல்படுத்தலாம்.
பிசினஸுகள் எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன் ஓவர்லே மற்றும் அன்டர்லே நெட்வொர்க்குகளுக்கு இடையிலான டிரேடு-ஆஃப்களைப் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் அவர்கள் ஒரு முன் அனுபவம் கொண்ட SD-WAN சேவை வழங்குனருடன் சேர்ந்து பணிபுரிய வேண்டும், அவர் அவர்களின் தேவைகளை மதிப்பீடு செய்யவும் சிறந்த அணுகுமுறையைத் தேர்ந்தெடுக்கவும் உதவுவார்.
சரியான SD-WAN சேவை வழங்குனரை தேர்வு செய்தல்
டிரான்சிஷன் வெற்றி அடைய ஒரு SD-WAN சேவை வழங்குநரின் தேர்வும் ஒரு முக்கிய காரணியாகும். ஒரு பிசினஸிற்குத் தேவையான அம்சங்களையும் செயல்திறனையும் வழங்கக்கூடிய நல்லதொரு வழங்குநரைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். ஒரு வழங்குநரைத் தேர்ந்தெடுக்கும்போது, பிசினஸுகள் செலவு, அளவிடுதல், நெட்வொர்க் செயல்திறன் மற்றும் வாடிக்கையாளர் ஆதரவு போன்ற காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
அனைத்து SD-WAN தேவைகளுக்கும் ACT ஒரு ஒன்-ஸ்டாப் ஷாப் போல செயல்படுகிறது. ACT-ன் SD-WAN ஐத் தேர்ந்தெடுப்பதன் சில நன்மைகள் பின்வருமாறு:
ஒன்-ஸ்டாப் நெட்வொர்க் தீர்வு
ACT-ன் SD-WAN தீர்வானது வேகமான மற்றும் நம்பகமான நெட்வொர்க் இணைப்புகளை வழங்குகிறது. அதோடு கிளவுட் அடாப்க்ஷனை ஊக்குவிக்கிறது மற்றும் முன்பை விட நிர்வகித்தலை எளிதாக்குகிறது.
பாதுகாப்பான மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய நெட்வொர்க்
ACT-ன் SD-WAN தீர்வானது பாதுகாப்பான, நம்பகத்தன்மை கொண்ட மற்றும் அதிக செயல்திறன் நெட்வொர்க்கில் அமைக்கப்பெற்றுள்ளது. இது பயனர் அனுபவத்தை மேம்படுத்துகிறது.
குறைந்த செலவு
ACT-ன் SD-WAN தீர்வானது செலவு, அளவிடுதல் மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்தவற்றை வழங்குகிறது.
தேவையான அம்சங்கள் மற்றும் திறனை கண்டறிதல்
SD-WAN நெட்வொர்க்கிற்குத் தேவையான அம்சங்கள் மற்றும் திறன்களை கண்டுபிடிப்பதே டிரான்சிஷன் செயல்முறையின் இறுதிப் படியாகும். ஒரு நெட்வொர்க்கிற்கு என்ன அம்சங்கள் தேவை மற்றும் எவ்வளவு திறன் தேவை என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். இது செயலிகள், டிராஃபிக் முறைகள் மற்றும் பயனர்களின் எண்ணிக்கை போன்ற காரணிகளைப் பொறுத்து அமையும்.
எடுத்துக்காட்டாக, பிசினஸுகள் சில வகையான டிராஃபிக்கிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் அல்லது வாய்ஸ் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான அதிக திறன் கொண்டதாக இருக்கலாம். SD-WAN க்கு டிரான்சிஷன் செய்வதற்கு முன் இந்தத் தேவைகளைப் புரிந்துகொள்வது முக்கியம். இதன் மூலம் சரியான அம்சங்கள் மற்றும் திறன்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
தேவைகளை கண்டறிந்ததும், பிசினஸுகள் தங்களது SD-WAN சேவை வழங்குனருடன் இணைந்து சரியான அம்சங்கள் மற்றும் திறன்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதா என்பதை உறுதிசெய்ய வேண்டும். இது ஒரு சிக்கலற்ற டிரான்சிஷன் நெட்வொர்க்கின் உகந்த செயல்திறனை உறுதிப்படுத்த உதவும்.
சிக்கலற்ற மாற்றத்திற்கான சிறந்த நடைமுறைகள்
பாரம்பரியமான WAN அமைப்பிலிருந்து SD-WAN க்கு வெற்றிகரமாக மாற்றுவதறகு திட்டமிடல் ஒரு முக்கியமான திறவுகோல் ஆகும். நிறுவனங்கள் தங்களது தற்போதைய அமைப்பு என்ன என்பதை தெரிந்துகொள்வதில் போதுமான நேரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் மற்றும் டிரான்சிஷன் செயல்முறையைத் தொடங்குவதற்கு முன் தங்கள் நெட்வொர்க்கிற்கான சிறந்த அமைப்பு எது என்பதையும் தீர்மானிக்க வேண்டும். சிக்கலற்ற மாற்றத்திற்கான சில சிறந்த நடைமுறைகள் பின்வருமாறு:
நிறுவனத்திற்கான சிறந்த ஒன்றை கண்டறிய கிடைக்கக்கூடிய தீர்வுகளை ஆராய்தல்
டிரான்சிஷன் செய்வதற்கு விரும்பும் பிசினஸுகள் கிடைக்கக்கூடிய தீர்வுகளை முழுமையாக ஆராய்ந்து அவற்றின் அம்சங்கள், நம்பகத்தன்மை, அளவிடுதல், செலவு மற்றும் வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றின் அடிப்படையில் அவற்றை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். கூர்ந்து மதிப்பிட்ட பிறகு, நிறுவனம் அதன் தேவைகளுக்கு ஏற்ற ஒரு பொருத்தமான தீர்வைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
நேரவரம்பை உருவாக்குதல் மற்றும் இலக்குகளை அமைத்தல்
நிறுவனங்கள் ஒரு நேரவரம்பை உருவாக்கி, டிரான்சிஷன் செய்வதற்கான இலக்குகளை அமைத்தல் வேண்டும். இது திட்டமானது சரியான நேரத்தில் முடிவடையவும் மற்றும் பட்ஜெட்டுக்குள் செய்யப்படுவதற்கும் உதவும். நேரவரம்பு மற்றும் இலக்குகள் வழக்கமான ஒன்று மற்றும் எளிதில் அடையக்கூடியவை என்பதை அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
ஏற்படக்கூடிய சாத்தியமான சிக்கல்களை விரைவாகக் கண்டறிய, டிரான்சிஷனின் ஒவ்வொரு படியையும் ஆவணப்படுத்துதல்
எந்தவொரு சாத்தியமான சிக்கல்களையும் விரைவாகக் கண்டறியவும், அவ்வப்போது தேவைக்கேற்ப மாற்றங்களைச் செய்யவும் நிறுவனங்கள் டிரான்சிஷனின் ஒவ்வொரு படியையும் ஆவணப்படுத்த வேண்டும். டிரான்சிஷன் முடிந்தவரை சீராகவும் வெற்றிகரமாகவும் இருப்பதை இது உறுதிசெய்யும்.
சிஸ்டமை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் ஏற்படக்கூடிய சாத்தியமான பிரச்சினைகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்து பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல்
கடைசியில், புதிய சிஸ்டத்தை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் ஏற்படக்கூடிய சாத்தியமான பிரச்சினைகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்து தங்கள் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். சிஸ்டம் சரியாகப் பயன்படுத்தப்படுவதையும், சாத்தியமான பிரச்சினைகள் ஏற்படுவதன் அபாயத்தைக் குறைக்கவும் இது உதவும்.
இந்த சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், நிறுவனங்கள் SD-WAN க்கு சிக்கலற்ற டிரான்சிஷனை உறுதிசெய்து, செலவுகளை ஏற்படுத்தக்கூடிய தவறுகளைத் தவிர்க்கலாம். இதன்மூலமாக , அவர்கள் இந்தத் தொழில்நுட்பத்தில் தங்கள் முதலீட்டை அதிகரித்து, நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தில் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளலாம்.
மாற்றத்திற்கு பிறகு நெட்வொர்க்கை எவ்வாறு கண்காணித்து சரிசெய்வது
ஒரு நிறுவனம் வெற்றிகரமாக SD-WAN ஐ செயல்படுத்தியவுடன், அது நெட்வொர்க்கை தொடர்ந்து கண்காணித்து பிரச்சினைகளை சரிசெய்ய வேண்டும். இது ஒரு சிக்கல் பெரிய தாக மாறுவதற்கு முன்பு சாத்தியமான சிக்கல்களைக் கண்டறிய அவர்களுக்கு உதவி புரியும். மாற்றத்திற்கு பிறகு நெட்வொர்க்கினை கண்காணித்து சரிசெய்வதற்கான சில வழிகள் பின்வருமாறு:
டிராஃபிக் முறைகளை பகுப்பாய்வு செய்யவும், முரண்களைக் கண்டறியவும் மற்றும் சாத்தியமான பிரச்சினைகளைக் கண்டறியவும் பகுப்பாய்வுக் கருவிகளைப் பயன்படுத்துதல்
டிராஃபிக் முறைகளை பகுப்பாய்வு செய்யவும், முரண்களைக் கண்டறியவும் மற்றும் சாத்தியமான பிரச்சினைகளை விரைவாகக் கண்டறியவும் நிறுவனங்கள் பகுப்பாய்வுக் கருவிகளைப் பயன்படுத்தல் அவசியம். நெட்வொர்க்கின் செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையை உறுதிசெய்ய இது முக்கியமானது.
செயலியின் செயல்திறன், லேட்டன்சி மற்றும் பிற முக்கிய அளவீடுகளைக் கண்காணிக்கும் பொருட்டு கண்காணிப்பு அமைப்பைப் பயன்படுத்துதல்
செயலியின் செயல்திறன், லேட்டன்சி மற்றும் பிற முக்கிய அளவீடுகளைக் கண்காணிக்க நிறுவனங்கள் கண்காணிப்பு அமைப்பைப் பயன்படுத்த வேண்டும். இது ஏற்படக்கூடிய சாத்தியமான சிக்கல்களை விரைவாகக் கண்டறிந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க உதவும்.
நெட்வொர்க் அப்டேட் செய்யப்பட்டதாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதிசெய்ய வழக்கமான சிஸ்டம் ஸ்கேன் மற்றும் சோதனைகளைச் செய்தல்
நெட்வொர்க் அப்டேட் செய்யப்பட்டதாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதிசெய்ய பிசினஸுகள் வழக்கமான கணினி ஸ்கேன் மற்றும் சோதனைகளைச் செய்ய வேண்டும். இது ஏற்படக்கூடிய எந்தவொரு சாத்தியமான சிக்கல்களைக் குறைக்கவும், சிறந்த செயல்திறனை பெறவும் உதவும்.
சேவையில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது தடைகள் இருக்கும்பட்சத்தில் IT ஊழியர்களுக்குத் தெரிவிக்க ரியல்-டைம் அலர்ட்களைப் பயன்படுத்துதல்
கடைசியாக, சேவையில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது தடைகள் இருந்தால் நிறுவனங்கள் ரியல்-டைம் அலர்ட்களைப் பயன்படுத்தி அதனை IT ஊழியர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இது எந்தவொரு பிரச்சினையையும் விரைவாகக் கண்டறிந்து சரிசெய்ய உதவும். இது, சாத்தியமான டவுன்டைமைக் குறைக்கவும், சிறந்த நெட்வொர்க் செயல்திறனை உறுதிப்படுத்தவும் உதவும்.
நெட்வொர்க்கை நன்றாக கண்காணித்து சரிசெய்வதற்கு போதுமான நேரத்தை எடுத்துக்கொள்வதன் மூலம், நிறுவனங்கள் தங்கள் SD-WAN அமைப்பு நீண்ட காலத்திற்கு நம்பகத்தன்மை கொண்டதாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதிசெய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலம், இந்தத் தொழில்நுட்பத்தில் அவர்களின் முதலீட்டை அதிகரித்து, நீண்ட காலத்திற்கு அதிலிருந்து அதிக நன்மைகளைப் பெறவும் அவர்களுக்கு உதவும்.
முடிவுரை
SD-WAN -ற்கு டிரான்சிஷன் செய்வது ஒரு கடினமான காரியமாக இருந்தாலும், அது பயனுள்ள ஒன்று. இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ள கருதுகோல்களை கருத்தில் வைத்துக்கொண்டு, ஒரு சிறந்த SD-WAN சேவை வழங்குனருடன் பணிபுரிவதன் மூலம், பிசினஸுகள் தங்கள் நெட்வொர்க்குகளின் சீரான டிரான்சிஷன் மற்றும் சிறந்த செயல்திறனை உறுதி செய்ய முடியும். இந்த அணுகுமுறையைப் பயன்படுத்தி, எந்தவொரு பெரிய குறுக்கீடுகளும் இல்லாமல், பிசினஸுகளால் SD-WAN- ல் இருந்து அதிகபட்ச பலன்களைப் பெற முடியும்.
இந்த பதிவை படித்த பிறகு, SD-WAN -ற்கு டிரான்சிஷன் செய்வதற்கு முன் நீங்கள் என்னென்ன கருதுகோள்களை கருத்தில் கொள்ள வேண்டும் என்ற புரிதலைப் பெற்றிருப்பீர்கள். உங்கள் நெட்வொர்க்கை கூர்ந்து கவனிக்கவும், சிக்கல்களை கண்டறிவதன் மூலமாகவும், SD-WAN அமைப்பின் கிடைக்கும் தன்மை மற்றும் பாதுகாப்பினை நீண்ட காலத்திற்கு பிசினஸுகள் உறுதி செய்யலாம். SD-WAN செயலாக்கம் செய்வதற்கான சரியான அணுகுமுறையை கண்டறிவதன் மூலமாக இந்த தொழில்நுட்பத்தில் பிசினஸுகளால் தங்களது முதலீடுகளில் இருந்து அதிகபட்ச நன்மைகளை அடைய முடியும்.
SD-WAN-ல் டிரான்சிஷன் செய்வது பற்றி நீங்கள் யோசித்து கொண்டிருந்தால், மேலும் தகவலுக்கு ACT-ஐ தொடர்புகொள்ளவும். உங்களுக்கான சிறந்த அணுகுமுறை மற்றும் திறமையான டிரான்சிஷன் வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். SD-WAN சர்வீஸ்கள் பற்றி மேலும் தெரிந்துகொள்ள விரும்பினால் எங்களது இணையதளத்தை பார்வையிடவும். ACT மூலமாக SD-WAN -ற்கு இன்றே டிரான்சிஷன் செய்யவும்.