இன்டர்நெட் சேவைகளை முதல் முறையாக பயன்படுத்துவது எப்படி?
-
0
-
-
3 minutes
பிற பயன்பாடுகளைப் போன்று, பெரும்பாலான பிசினஸ்கள் மற்றும் வீட்டு வேலைகளுக்கு, இன்டர்நெட் ஆக்ஸஸ் என்பது அடிப்படைத் தேவையாகிவிட்டது. இன்டர்நெட் சேவை வழங்குநர்கள் என்பது இணையத்தைப் பயன்படுத்துவதற்கும், அணுகுவதற்கும் அல்லது அதனுடன் இணைவதற்கும் பல்வேறு சேவைகளை வழங்கும் நிறுவனங்களைக் குறிக்கிறது. ஒரு வாடிக்கையாளராக நீங்கள் இன்டர்நெட் சேவையைப் பெற விரும்பினால், ISP-யிடம் இருந்து நீங்கள் இணைப்பைப் பெற வேண்டும். இன்டர்நெட் சேவை இணைப்பை நாடுவது என்பது பல்வேறு வாய்ப்புகள் மற்றும் ரிசோர்ஸ்களுடன் உங்களை இணைக்க அனுமதிக்கிறது. ஒரு இன்டர்நெட் சேவையைத் தேர்ந்தெடுக்கும் முன், நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய அம்சங்களை இந்தக் கட்டுரை எடுத்துரைக்கிறது..
இன்டர்நெட் சேவையின் நன்மைகள்
இன்டர்நெட், அதாவது இணையம் என்பது பில்லியன் கணக்கான அமைப்புகள் மற்றும் மின்னணு சாதனங்களின் உலகளாவிய தொடர்பாகும். இன்டர்நெட் சேவையின் மூலம், பயனர்கள் எந்தவொரு தகவலையும் பகிரலாம் மற்றும் அணுகலாம் மற்றும் உலகளாவிய அளவில் நாம் எவருடனும் தொடர்பு கொள்ளலாம். இன்டர்நெட் வசதியைப் பெற ஒரு வாடிக்கையாளர் குறிப்பிட்ட சில சாதனங்களை இணைக்க வேண்டும். நீங்கள் உங்கள் வீட்டிற்கு அல்லது உங்கள் அலுவலகத்திற்கு இன்டர்நெட்டைப் பயன்படுத்தினாலும், இன்டர்நெட் சேவை வழங்குநரிடமிருந்து இன்டர்நெட் இணைப்பை வாங்க வேண்டும். பொதுவாக இன்டர்நெட் சேவை வழங்குநர்கள் ஒரு கேபிள் நிறுவனம், தொலைபேசி நிறுவனம் அல்லது அரசாங்கமாக இருக்கலாம். இதற்கு ரவுட்டர்கள், லேன் கேபிள்கள், மோடம்கள், சுவிட்சுகள் போன்ற பிற சாதனங்கள் உங்களுக்குத் தேவைப்படலாம்.
ஒரு இன்டர்நெட் சேவையைத் தேர்வு செய்வதற்கு முன் கருத்தில் கொள்ள வேண்டிய காரணிகள்
பிசினஸ் அம்சங்கள்
நீங்கள் தேர்வு செய்ய விரும்பும் இன்டர்நெட் இணைப்புடன் ஒரு உள்ளூர் அல்லது உலகளாவிய பிசினஸைத் தொடங்க விரும்பினால், இன்டர்நெட் சேவைக்குத் தேவையான உபகரணங்களையும் ஒட்டுமொத்த பட்ஜெட்டையும் திட்டமிட வேண்டும். ஒரு வாடிக்கையாளராக, விரைவான மற்றும் எந்த வித தொந்தரவும் இல்லாத இன்டர்நெட் இணைப்பிற்கு நீங்கள் தரமான உபகரணங்களில் முதலீடு செய்ய வேண்டும். நீங்கள் செய்ய வேண்டிய அடுத்த விஷயம், நீங்கள் இன்டர்நெட் பேண்ட்வித் வாங்க விரும்பும் சரியான ஒரு ISP-ஐக் கண்டுபிடிப்பதாகும். உங்கள் இன்டர்நெட் சேவையை அனுபவிப்பதற்கு ACT Fibernet போன்ற நிறுவனங்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். பேண்ட்வித் மற்றும் ஹார்ட்வேர்-ன் சரியான சப்ளையர்களைப் புரிந்து கொள்ள நீங்கள் நிபுணர்களிடமிருந்து வழிகாட்டுதலையும் பெற வேண்டும். உங்கள் வணிகத்தைத் திட்டமிடும் போது உங்கள் நகரம் அல்லது மாநிலத்தில் சாஃப்ட்வேர் மற்றும் ஹார்ட்வேர் எளிதில் கிடைக்கிறதா என்பது நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான தேவையாகும். ஏனென்றால், இயற்கை அல்லது செயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் இணைப்பு துண்டிப்புகளுக்கு உடனடியாக நீங்கள் தீர்வை வழங்க வேண்டும்..
டெக்கினிக்கல் அம்சங்கள்
இது தான் ஒரு இன்டர்நெட் சேவையின் மிக முக்கியமான அம்சம் ஆகும். நீங்கள் தேர்வு செய்யும் இன்டர்நெட் சேவையானது உங்கள் பகுதியில் சேவை செய்யும் ISP-கள் மற்றும் அவர்கள் வழங்கும் பேண்ட்வித் பிளான்களைப் பொறுத்து அமைகிறது. இன்டர்நெட் சேவைகளில் சில பொதுவான வகைகள் பின்வருமாறு -
டயல்-அப்: இது ஒரு பாரம்பரியமான இணைய இணைப்பு மற்றும் இது மெதுவாக இருக்கும். இது மட்டுமே உங்கள் பகுதியில் சாத்தியமான ஒரே சேவையாக இல்லாத பட்சத்தில், நீங்கள் அதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அதே சமயத்தில், இன்டர்நெட் இணைப்பை வழங்க இது பல தொலைபேசி இணைப்புகள் அல்லது லேண்ட்லைன் இணைப்பைப் பயன்படுத்துகிறது.
DSL: டயல்-அப் லைன்களுடன் ஒப்பிடும் போது, இந்த பிராட்பேண்ட் இணைப்பு சற்று வேகமாக இருக்கும். இது தொலைபேசி இணைப்புகள் மூலம் இன்டர்நெட் சேவைகளை வழங்கினாலும், மெதுவாக இயங்கும் லேண்ட்லைனை டயல்-அப் சேவையாகப் பயன்படுத்துவதில்லை.
செயற்கைக்கோள் இணைப்பு: இது பிராட்பேண்ட் கம்யூனிக்கேஷன் டெக்னிக்கை பயன்படுத்துகிறது ஆனால் கேபிள் அல்லது தொலைபேசி இணைப்புகளைப் பயன்படுத்துவதில்லை. இது இன்டர்நெட் சேவையை வழங்க வயர்லெஸ் மீடியத்தைப் பயன்படுத்துகிறது. இத்தகைய இணைப்புகள் வானிலை பேட்டர்ன்களால் பாதிக்கப்படக் கூடும்.
3G மற்றும் 4G: இவை நவீன ISP-ன் சமீபத்திய இன்டர்நெட் சேவை முறைகளாகும். இது ISP-ன் நெட்வொர்க் மூலம் வாடிக்கையாளர்களை வயர்லெஸ் முறையில் இணைக்கிறது. இந்த வகையான நெட்வொர்க்குகள் செல்லுலார் போன்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களில் பிரபலமாக உள்ளன.
ரவுட்டர் மற்றும் மோடமை இயக்குவதன் மூலம் இன்டர்நெட் இணைப்பை உங்களுக்கு வழங்குவதே ISP-ன் பொறுப்பாகும். ஹார்ட்வேர் மற்றும் இன்டர்நெட் சேவை மாடல்களைத் தவிர, ஒரு வெப் பிரவுசர் மற்றும் வெப்சைட்களை கனெக்ட் செய்ய மற்றும் பார்க்க ஒரு கணினி அல்லது PC உங்களுக்கு தேவைப்படும். ஒரு வெப் பிரவுசர் என்பது அதன் பயனர்களை இன்டர்நெட்டில் இருக்கும் குறிப்பிட்ட தகவல்கள் மற்றும் இணையப் பக்கங்களை அணுக அனுமதிக்கும் ஒரு அப்ளிகேஷன் ஆகும். இஇன்டர்நெட் உடன் இணைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கணினிக்கும் அல்லது நாம் பார்வையிடும் வெப்சைட்டிற்கும் ஒரு தனித்துவமான முகவரி உள்ளது. இந்த முகவரியை உங்கள் வெப் பிரவுசரில் டைப் செய்வதன் மூலம், அந்த வெப்சைட்களை நீங்கள் அணுகலாம். HTML-ல் எழுதப்பட்ட அந்த வெப்சைட்களைக் காண்பிக்க பிரவுசர் பொறுப்பேற்கும்.
முடிவுரை
சேவை வழங்குநரை எவ்வாறு அணுக வேண்டும் என்பது பற்றிய தெளிவான சிந்தனையைப் பெற இந்தப் புரிதல் உங்களுக்கு உதவியிருக்கும் என நம்புகிறோம். மேலும், ஒரு சேவையைத் தேடும் போது எதை எல்லாம் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கும் இது வழிகாட்டுகிறது. இன்டர்நெட் சேவையை அமைப்பது என்பது எந்தவொரு பிசினஸ்-ற்கும் இன்றியமையாத ஒரு கட்டமாகும். இன்று கிட்டத்தட்ட அனைவரும் தங்கள் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் பிசினஸ்களில் இன்டர்நெட் சேவையைப் பயன்படுத்துகின்றனர். கிளவுடில் டேட்டாவைச் சேமிப்பது முதல் ஆன்லைன் ரிசோர்ஸ்களைத் தேடுவது வரை, ஒவ்வொரு செயலுக்கும் இணையம் இன்றியமையாததாக உள்ளது. நீங்கள் இன்டர்நெட் சேவை இணைப்பைத் தேடுகிறீர்களானால், ACT ஃபைபர்நெட் அதற்கு சிறந்ததாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. 19 நகரங்களில் உள்ள இந்தியாவின் முன்னணி பிராட்பேண்ட் சேவை வழங்குனராக, ACT ஆனது உங்கள் ஒவ்வொரு தேவைக்கும் ஏற்ற வகையில் பல்வேறு பிராட்பேண்ட் பிளான்களை வழங்குகிறது..
வைஃபை இணைப்பு தேவைப்படும் தனிநபராக இருந்தாலும் அல்லது நிறுவனமாக இருந்தாலும், அனைத்துமே ACT ஃபைபர்நெட்டின் பிராட்பேண்ட் பிளான்களின் கீழ் அடங்கும். அவை உங்கள் தேவைகளுக்கு ஏற்ப வரம்பற்ற பிராட்பேண்ட் மற்றும் டேட்டா சார்ந்த வைஃபை திட்டங்கள் போன்ற சிறப்புப் பேக்கேஜ்களுடன் நீங்கள் தேர்வு செய்யும் விதத்தில் அமைந்துள்ளன.